காதைக் கொண்டு வாங்க.. அடுத்த சசிகலா வீடியோ என்ன தெரியுமா?
சசிகலா வீடியோ இன்னும் நிறைய இருப்பதாகவும் அதை அடுத்தடுத்து வெளியிட சிலர் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி அதிமுக அம்மா அணியினரை பதைபதைப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா விதிகளை மீறி வெளியே சென்று வந்தது தொடர்பாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வீடியோ போல இன்னும் நிறைய வீடியோக்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக வெளியிடப்படவுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து சேர்த்த சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் 4 சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சசிகலா, இளவரசி ஆகியோர் அதே வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையிலும், சுதாகரன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். மேலும் 2 கோடி ரூபாய் அதற்கு லஞ்சமாக வழங்கப்பட்டது என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இடம் மாற்றம்
இதை அதே துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் முழுவதுமாக மறுத்தார். ஆதாரங்கள் இருந்தால் நிரூபிக்கட்டும் என்று ராவ் கூறியிருந்தார். இந்த நிலையில் ரூபா மற்றும் சத்திய நாராயணராவ் ஆகிய 2 அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராவ் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video


5 அறைகள்
சிறையில் சசிகலாவுக்கு தனி செல்லில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ மற்றும் போட்டோஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சியில் தெளிவான வீடியோ
இந்தநிலையில் சசிகலா சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் கையில் ஒரு பையுடன் அங்குமிங்குமாக நடமாடும் புதிய தெளிவான வீடியோ காட்சிகள் நேற்று ஒரு கன்னட செய்தி தொலைக்காட்சியில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பதைபதைப்பில் அதிமுக அம்மா அணி
சிறையில் சசிகலாவின் செயல்பாடு குறித்து புதிய, புதிய வீடியோ காட்சிகள் தொடர்ந்து வெளியாகி வருவதால் அடுத்து என்ன வீடியோ காட்சி வெளிவரும் என்று அதிமுக அம்மா அணி பிரபலங்கள் பதைபதைப்பில் இருக்கிறார்கள்.

மேக்கப் வீடியோ
இந்த நிலையில் சசிகலா சம்பந்தப்பட்ட மேலும் 2 வீடியோக்கள் புதிதாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக கன்னட தொலைக்காட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சசிகலாவும், இளவரசியும் மேக்கப் போடுவது போன்ற வீடியோவும் அவர்கள் சிறைக்கு வெளியே ஷாப்பிங் செல்வது போலவும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு அந்த வீடியோக்கள் கன்னட தனியார் டி.வி.சேனல் நிருபர் கையில் உள்ளதாகவும், அந்த வீடியோக்கள் இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications