For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இன்னும் 3, 4 மாசம் தான்!" புதினுக்கு மோசமான கேன்சர்! ரஷ்யா அடுத்து இவர்கள் கண்ட்ரோலில்! பகீர் தகவல்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ஒரு புறம் உக்ரைன் போர் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மறுபுறம் புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது

இந்த ஆண்டு தொடக்கம் முதலே அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து உக்ரைன் தீவிரமாக ஆலோசித்து வந்தது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யாவுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நேட்டோ படைகள் உக்ரைன் நாட்டில் தங்கள் தளவாடங்களை ஏற்படுத்தும். சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யாவுக்கு மிக அருகே அமெரிக்கப் படைகள் வரலாம்.

புதினை படுகொலை செய்ய முயற்சி.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.. பகீர் கிளப்பும் உக்ரைன் உளவுத்துறை புதினை படுகொலை செய்ய முயற்சி.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.. பகீர் கிளப்பும் உக்ரைன் உளவுத்துறை

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

இதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். இறுதியில் போரை ஆரம்பித்தார். தொடக்கத்தில் சில வாரங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போர் மாதக் கணக்கில் தொடர்கிறது. இப்போது இந்தப் போர் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், இன்னும் கூட சண்டை ஓய்ந்த பாடில்லை. இதைப் போர் எனக் குறிப்பிட்ட மறுக்கும் புதின், ரஷ்யா பாதுகாப்பா உறுதி செய்யும் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே இதைக் கூறி வருகிறார்.

 விளாடிமர் புதின்

விளாடிமர் புதின்

ஒருபுறம் போர் தொடரும் நிலையில், மறுபுறம் ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது. 69 வயதாகும் புதின் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடந்த சில சம்பவங்களையும் இதற்கு ஆதாரமாக அவர்கள் பட்டியலிடுகின்றனர்.

 கனைய புற்றுநோய்

கனைய புற்றுநோய்

இப்போது புதின் கனைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரஷ்ய அதிபர் மாளிகை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாக முன்னாள் சோவியத் மற்றும் இப்போது இஸ்ரேலிய பத்திரிக்கையாளராக உள்ள மார்க் கோட்லியார்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "புதினுக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு வீரியம் மிக்க கட்டி, இது உறுப்பு வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் ஏற்படுகிறது.

 3, 4 மாதம் தான்

3, 4 மாதம் தான்

அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்ப் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. உடனடியாக புதினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அப்போது தான் அவரால் உயிர்வாழ முடியும். அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மாதங்களில் அவருக்கு இந்த சிக்கலான ஆப்ரேஷன் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

 டோட்டல் கண்ட்ரோல்

டோட்டல் கண்ட்ரோல்

மேலும், விளாடிமிர் புதின் கணைய புற்றுநோய் தீவிர பாதிப்பாக உள்ளதால், மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்று புதினுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக அங்குள்ள ப்ளோகின் மையம் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் சுற்றி முழுவதும் ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அங்குப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

 சிறப்பு கவுன்சில்

சிறப்பு கவுன்சில்

அதன்படி புதினுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் தேவையான பணிகள் ரகசியமாக நடைபெற்று வருகிறது. இது சிக்கலான ஆப்ரேஷன் என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை மோசமான முடிவு ஏற்பட்டால், ரஷ்யாவை ஒரு சிறப்பு கவுன்சில் வழிநடத்தும். புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்த இடைக்கால அமைப்பிடம் தான் ரஷ்யாவின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த கவுன்சிலில் யார் இடம்பெற்றுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Recommended Video

    Russia-வுக்கு எதிராக US அனுப்பும் MQ-1C Gray Eagle Drone | Ukraine VS Russia | #DefenceWrap
    மறுப்பு

    மறுப்பு

    இருப்பினும், இதுபோன்ற தகவல்களை ரஷ்யத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. புதின் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் தினசரி டிவிகளின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருவதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். இருப்பினும், அவை எடிட் செய்யப்பட்ட காணொலிகள் என்பதால் அதை நம்ப முடியாது என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

    English summary
    Russian President Vladimir Putin is suffering from pancreatic cancer: (கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின்) Vladimir Putin health latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X