பெண் பத்திரிகையாளர்கள் அவ்வளவு அப்பாவியா.. பாஜக மகளிர் அணி தலைவர் குசும்பு!
போபால்: ஒருவர் வந்து அவர்களை தவறாக பயன்படுத்தும் அளவுக்கு பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகளாக இல்லை என்று கருதுகிறேன் என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் லதா கெல்கர் கூறியுள்ளார்.
லதா கெல்கரின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பெண் பத்திரிகையாளர்களை கிண்டலடிப்பது போல பேசியுள்ளதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது.

மத்திய அமைச்சரும், முன்னாள் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர் மீது பல பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் அத்துமீறல் புகார்களைக் கூறியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்பர் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
#WATCH: I welcome this #MeToo campaign but I don't consider women journalists to be so innocent that anyone can misuse them, says Lata Kelkar, Chief of Madhya Pradesh BJP women wing on MJ Akbar. (11.10.18) pic.twitter.com/4gM5shTkg3
— ANI (@ANI) October 12, 2018
இந்த நிலையில் லதா கெல்கரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த லதா கெல்கர், மீ டூ பிரசாரத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு ஆண் தன்னை தவறாகப் பயன்படுத்துவதைக் கூட தடுக்க முடியாத அளவுக்கு பெண் பத்திரிகையாளர்கள் இல்லை என்று நான் கருதுகிறேன் என்று நக்கலாக பதிலளித்தார் லதா கெல்கர்.
இதன் மூலம் அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமானவை என்று மறைமுகமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications