For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கராசார்யா சாமியாரின் ரூ.1.35 கோடி சொகுசு பஸ்சிற்கு வரிவிலக்கு அளித்த மத்திய பிரதேச அரசு

By Karthikeyan
Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் சங்கராசார்யா சாமியாரின் 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பஸ்சிற்கு அம் மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள சங்கராசார்யா சாமியாருக்கு சகல வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து ஒன்று உள்ளது. இந்த பேருந்து 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு பின்னர் வாஷிங் அறை, லிப்ட், பெட் போன்ற சகல வசதிகளுடன் 1.30 கோடி ரூபாய்க்கு மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

MP cabinet grants tax exemption to Shankaracharya's camper vehicle

இந்த வாகனம் சங்கராசார்யா ஜோதிஷ்பீதா, ஸ்வாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்திற்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தார்.

இதன் அடிப்படையில்தான் சாமியாரின் பஸ்சிற்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.

1.35 கோடி ரூபாய் மதிப்பிலான காருக்கு சுமார் 11 லட்சம் ரூபாய் சாலை வரி கட்ட வேண்டியதிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால் சாமியாருக்கு மத்திய பிரதேச அரசு 11 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது.

இதுகுறித்து ம.பி. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து விளக்கம் அளித்தார். ஆனால், எவ்வளவு ரூபாய் வரிவிலக்கு அளிக்கப்பட்டது என்பது குறித்து அவர் கூறவில்லை.

மத்திய பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவை எதிர்க்கவில்லை. சங்கராசார்யா சாமியாருக்கு வரிவிலக்கு செய்து மரியாதை கொடுத்த முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மாநில காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

English summary
Shankaracharya Swaroopanand Saraswati applied for a tax exemption for his 1.3 crore vehicle and the cabinet approved the proposal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X