கிணற்றில் விழுந்த 8 வயது குழந்தை.. வேடிக்கை பார்க்க போன 40 பேர் தவறி விழுந்ததால் அதிர்ச்சி
போபால் : மத்திய பிரதேச மாநிலம் விடிஷாவில் கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமி மீட்கப்படுவதை வேடிக்கை பார்த்த 40 பேர் கிணற்றின் சுவர் சரிந்து அடுத்தடுத்து தவறிவிழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
Recommended Video
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது விடிஷா மாவட்டம் , இங்குள்ள ஒரு கிராமத்தில் நேற்று மாலை 8வயது சிறுமி கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
திடீரென சிறுமி கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சிறுமியை மீட்க மீட்பு படை விரைந்து வந்தது. அதற்குள் கிணற்றைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியது. கிராமம் முழுக்க பரவிய தகவலால் அவர்கள் அனைவரும் கிணற்றின் சுவரை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

உயிருக்கு போராடினர்
அப்போது கிணற்றின் ஒரே சுவரில் 40க்கும் மேற்பட்டோர் சாய்ந்து நின்று கொண்டிருந்ததால் அது திடீரென சரிந்தது. இதனால் சுமார் 40 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். 40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் ஏராளமானோர் விழுந்து உயிருக்கு போராடினர். அவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

3 பேர் உடல்கள்
தற்போது வரை 23 பேர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த 23 பேரில் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகிறார்கள். இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு
இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங்கிற்கு அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

10 பேர் பலியாகியிருக்கலாம்
இதனிடையே முதல் முதலில் கிணற்றில் விழுந்த சிறுமி உள்பட 17 பேரை மீட்க வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 10 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications