வினோத் காம்ப்ளியை காணவில்லை! கடன் பாக்கிக்காக பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்ட வங்கி
மும்பை: சச்சின் நண்பர், வினோத் காம்ப்ளிக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா.. வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி காம்ப்ளியையும், அவரது மனைவியும் காணவில்லை என்று பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது தோம்பிவாளி நகர கூட்டுறவு வங்கி. சச்சின் தலையிட்டு காம்ப்ளியை காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு மகாராஷ்டிர கிரிக்கெட் ரசிகர்கள்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அப்பவே அப்படி..
பள்ளி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது பள்ளித்தோழர்களான சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில், 664 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தனர். 1988ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட நிலையில், 1991ம் ஆண்டு சார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார்.

மாரடைப்பால் பாதிப்பு
இந்தியாவுக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும், 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள காம்ப்ளி 2009ம் ஆண்டில் ஓய்வு முடிவை அறிவித்தார். மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் காம்ப்ளிக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம், மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.

காம்ப்ளியை காணவில்லையா..?
இந்நிலையில் மராத்தி செய்தித்தாள் ஒன்றில் வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா ஆகியோரின் புகைப்படத்தை பிரசுரித்து, அவர்களை காணவில்லை என்று தெரிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கி
இந்த விளம்பரத்தை டோம்பிவாளி நகர கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ளது. மேலும், காம்ப்ளி மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா குறித்து தகவல் தெரிந்தோர், வங்கியை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கடன் பாக்கி
இந்த வங்கியில் இருந்து காம்ப்ளியும் அவரது மனைவியும் கடன் பெற்றுவிட்டு அதை திரும்ப செலுத்தவில்லை என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications