உலகின் பெரிய இந்து கோவில் கட்ட ரூ.2.5 கோடி நிலத்தை கொடையாக அளித்த முஸ்லிம் குடும்பம்
(இன்றைய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து அளிக்கிறோம்.)
உலகின் மிகப்பெரிய இந்து கோவில் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை பாட்னாவை மையமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் செய்துவருகிறார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் "விராட் ராமாயண் மந்திர்" கோவில் அமையவுள்ளது. இது 215 அடி உயரமுள்ள கம்போடியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் வளாகத்தை விட உயரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பம் இந்த கோவிலை கட்டுவதற்காக ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் கூறுகையில் " நிலத்தை நன்கொடையாக வழங்கிய இஷ்தியாக் அகமது கான் குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபர்.
இவர் இந்த கோவில் கட்டுவதற்காக தனது குடும்பத்திற்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இது சமூக நல்லிணக்கம் மற்றும் இரு சமூகங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு " என அவர் தெரிவித்தார் என்கிறது தினத்தந்தி செய்தி.
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியர் கைது
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தினகரன் நாளிதழ்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பரிதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(57). செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 24 மற்றும் 20 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராமலிங்கம் கடந்த சில நாட்களாக அவர் பணிபுரியும் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
மேலும் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டி வந்தாராம். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராமலிங்கத்தை நேற்று கைது செய்து போளூர் சிறையில் அடைத்தனர் என்று தெரிவித்துள்ளது தினகரன் நாளிதழ்.
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான வன்முறை இனப்படுகொலை என்ற அமெரிக்க அறிவிப்புக்கு வரவேற்பு
மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறைத் தாக்குதல் ஒரு இனப்படுகொலை என்று அமெரிக்கா அறிவித்திருப்பதற்கு வங்க தேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிஞ்சா அகதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆன்டனி பிளிங்கன் வெளியிட்ட இந்த அறிவிப்பு குறித்து வங்க தேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உற்சாகத்தை வெளியிட்டனர். இந்த மாவட்டம் சுமார் 10 லட்சம் ரோஹிஞ்சா அகதிகளுக்கு புகலிடமாக அமைந்துள்ளது என்று தி ஹிந்து தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
"இனப்படுகொலை என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள் பல" என்று குடுபாலாங் முகாமில் உள்ள 60 வயது சலாவுதீன் என்ற அகதியையும் அந்த செய்தி மேற்கோள் காட்டுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?















Click it and Unblock the Notifications