பிறந்தநாளன்றே மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி. திவாரி
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி. திவாரி உடல்நலக் குறைவால் தன்னுடயை பிறந்தநாள் தினத்திலேயே மறைந்தார். அவருக்கு வயது 93.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வராக இருந்தவர் என்.டி. திவாரி. ஆந்திர மாநில ஆளுநராகவும் பதவி வகித்தார். இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட திவாரி இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் கடந்த 1925-ஆம் ஆண்டு நைனிடாலில் பிறந்தார். தனது 88-ஆவது வயதில் உஜ்வாலா திவாரியை திருமணம் செய்து கொண்டார்.
இவர் பிறந்த தினமான இன்றே இவர் காலமாகிவிட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தினஅ முதல்வராக 3 முறை பதவி வகித்தவர். அதுபோல் உத்தரகாண்ட் முதல்வராகவும் இருந்தார் நாராயண் தத் திவாரி (என் டி திவாரி).
கடந்த 2007-ஆம் ஆண்டு ஆந்திர ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட இவர், தன் மீது செக்ஸ் புகார் கூறப்பட்டதை அடுத்து 2009-ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து டேராடூனுக்கே திரும்பி சென்றார்.
-
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications