நடிகை ரோஜா பதவி பறிப்பு.. ஒரே உத்தரவில் காலியான பொறுப்புகள்.. ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி
விஜயவாடா: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா, ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவராக இருந்தார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த புதிய உத்தரவின் காரணமாக ரோஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்
இந்நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக நடிகை ரோஜா 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

அமைச்சர் பொறுப்பு
அவருக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் தருவார் என்று கடந்த 2019ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் ரோஜா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ரோஜாவின் பங்கு முக்கியமானதாக அப்போது கருதப்பட்டது

தொழிற்சாலைகள் தலைவர்
ஆனால், ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக , ரோஜாவுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறையின் தலைவராக ரோஜாவை ஜெகன் மோகன் ரெட்டி நியமித்தார். கடந்த இரு வருடங்களாக அந்த பொறுப்பில் ரோஜா நீடித்து வந்தார்.

ஒருவருக்கு ஒரு பதவி
இந்நிலையில், எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி முடிவு செய்தார். இதன்படி எம்எல்ஏக்கள் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும் அவர் அதிரடியாக பறித்தார்.

பதவி பறிப்பு
அதன்படி தான் . அதில், நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜா வகித்து வந்த ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ரோஜா மட்டுமின்றி மேலும் சில எம்ல்ஏக்கள் வகித்து வந்த பதவிகளும் பறிக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications