மகாராஷ்டிராவில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரத்தின் நான்டெட் மாநகராட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் 45 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

மாநிலத்தின் நான்டெட்- வாகாலா மாநகராட்சி தேர்தல் அண்மையில் நடத்தப்பட்டது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. மொத்தம் 81 இடங்களில் 45 வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

Nanded Municipal corporation results: BJP severely loses

அதேபோல் மேலும் 20 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியாக உள்ள பாஜகவோ வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நான்டெட் தொகுதியானது காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான அசோக் சவானின் சொந்த தொகுதியாகும். கடந்த 15 வருடங்களாக நான்டெட் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்தாலும், இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என மாநில முதல்வர் ஃபட்னவிஸ் காங்கிரஸ், சிவசேனைக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்தார்.

எனினும் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சவானுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The results of the crucial 81-seat Nanded-Waghala Municipal Corporation will be releasing today. Congress wins 45 wards, it leads in 20 and BJP got only 2.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற