For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யால்தான் இந்தியாவில் நிலையான அரசை தர முடியும்: நரேந்திர மோடி

By Mathi
Google Oneindia Tamil News

பஹ்ரைச்: உத்தரப்பிரதேச மாநிலத்தால் மட்டுமே இந்தியாவில் நிலையான அரசை தர முடியும் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியால் என்னை ஜனநாயக ரீதியாக தோற்கடிக்க முடியவில்லை. அதனால்தான் சிபிஐ மற்றும் இந்தியன் முஜாஹிதீன் போன்றவற்றால் தன் முகத்தை காங்கிரஸ் மூடிக் கொள்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை ஒரே மரபணு கொண்டவை. மமதா பானர்ஜி தமது மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் போராடி வருகிறார்.

Narendra Modi says UP will give stability to India

ஆனால் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகியவை தங்களை சிபிஐயிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள மட்டுமே மத்திய அரசை ஆதரிக்கின்றன. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகியவை கிரிமினல்கள் மற்றும் ஊழலின் கூடாரங்களாக இருக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் நிறைய வளம் கொண்ட மாநிலம். இந்த மாநிலத்தால்தான் நிலையான அரசை மத்தியில் கொடுக்க முடியும்.

உத்தரப்பிரதேச முதல்வர் எனக்கு சிங்கம் வேண்டும் என்று கடிதம் அனுப்பினார். அதற்கு பதிலாக மின்சாரம் போன்ற அத்தியாவசியமானதை கேட்டு எனக்கு கடிதம் அனுப்பினார். நாட்டில் இப்பொழுது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாற்றத்துக்கான அலை வீசுகிறது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவோம் என்றார்.

English summary
Narendra Modi says UP will give stability to India. Congress can't defeat him democratically on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X