For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணி-272, காங் கூட்டணி-115, மற்றவை-156 இடங்கள்- ஹெட்லைன்ஸ் டுடே எக்ஸிட் போல்

By Mayura Akilan
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 272 ஆட்சியமைக்கும் என்று ஹெட்லைன்ஸ் டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 272 இடங்களைக் கைப்பற்றும். இதில் 11 இடங்கள் கூடவோ குறையவோ வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 115 இடங்களை மட்டுமே வெல்லும். இதில் 5 இடங்கள் கூடவோ, குறையவோ வெல்ல வாய்ப்பு உள்ளது.

பிற கட்சிகள் 156 இடங்களை வெல்லும். 6 இடங்கள் கூடவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி...

டெல்லி...

டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை. பாஜக கூட்டணி 5 முதல் 7 இடங்களைக் கைப்பற்றும் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களை வெல்லும்.

ஹரியானா....

ஹரியானா....

பாஜக கூட்டணிக்கு 7முதல் 9 இடங்கள் கிடைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 0-2 இடங்களும் பிற கட்சிகள் 2 இடங்களை வெல்லும்.

ராஜஸ்தான்....

ராஜஸ்தான்....

பாஜக இங்கு 21முதல்25 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் 0 முதல் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

அதிமுக 20 முதல் 24 இடங்களை வெல்லும் திமுக10 முதல்14 இடங்களை வெல்லும் பாஜக கூட்டணிக்கு 2 முதல் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 0 முதல் 8 இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். அதே சமயம் பிற கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைக்கும்.

கர்நாடகா

கர்நாடகா

காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல்19 இடங்கள் கிடைக்கும். பாஜகவிற்கு 6முதல்10 இடங்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 2 முதல் 4 இடங்களும் கிடைக்கும்.

கேரளா

கேரளா

காங்கிரஸ் கூட்டணிக்கு 13 முதல் 17 இடங்கள் கிடைக்கும். பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது. இடது சாரிகள் கூட்டணி 4 முதல் 6 இடங்களில் வெல்ல வாய்ப்பு.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

காங்கிரஸ் கூட்டணிக்கட்சிக்கு 11முதல்15 இடங்கள் கிடைக்கும். பாஜகவிற்கு 27 முதல் 35 இடங்களும் பிற கட்சிகளுக்கு 2 முதல் 6 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குஜராத்

குஜராத்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆளும் குஜராத்தில் பாஜக கூட்டணிக்கு 24 முதல் 26 இடங்கள் கிடைக்கும். அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 இடங்கள் கிடைக்குமாம்.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

காங்கிரஸ் கட்சிக்கு 3முதல் 5 இடங்களும் பாஜக கூட்டணிக்கு 23 முதல் 27 இடங்களும் கிடைக்கும்.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம்

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல்காங்கிரஸ் கட்சிக்கு 25முதல்29 இடங்கள் வரை கிடைக்கும். அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு 4முதல்6 இடங்கள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள் கட்சி 7 முதல் 9 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் பாஜகவிற்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்

நாட்டிலேயே அதிக தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவிற்கு நல்ல அறுவடை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 47 முதல் 55 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு 4முதல் 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 முதல் 14 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிக்கு 10 முதல் 14 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பீகார்

பீகார்

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி 21 முதல் 23 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கூட்டணி 8 முதல் 12 இடங்களை வெல்லும் என்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 4 முதல் 6 இடங்களை மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 6 முதல் 8 இடங்களை கைப்பற்றுமாம்.

ஆந்திரபிரதேசம்

ஆந்திரபிரதேசம்

ஆந்திரபிரதேசம் தெலுங்கானா - சீமாந்திரா என்று பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் லோக்சபா தேர்தல் இது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே சமயம் பாஜக கூட்டணிக்கு 15 முதல் 19 இடங்கள் கிடைக்குமாம். மாநிலக் கட்சிகளான தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சிக்கு 10 முதல் 14 இடங்கள் கிடைக்கும் என்றும் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 12 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 0 முதல் 2 இடங்கள் வரை கிடைக்குமாம்.

பஞ்சாப்

பஞ்சாப்

காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் 4 இடங்களும் பாஜக கூட்டணிக்கு 8 முதல் 10 இடங்களும் கிடைக்கும். பிற கட்சிகள் 2 இடங்களை வெல்லுமாம்.

அஸ்ஸாம்

அஸ்ஸாம்

காங்கிரஸ் கட்சிக்கு 7 முதல் 11 இடங்களும் பாஜக கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்களும் பிற கட்சிகளுக்கு 2 முதல் 4 இடங்களும் கிடைக்கும்.

ஜார்கண்ட்

ஜார்கண்ட்

காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 5 இடங்களும் பாஜக கூட்டணிக்கு 8 முதல் 10 இடங்களும் பிற கட்சிகள் 1 இடத்தையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒடிஷா

ஒடிஷா

காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 3 இடங்களும் பாஜக கூட்டணிக்கு 5 முதல் 9 இடங்களும் கிடைக்கும் அதே நேரத்தில் பிற கட்சிகள் 10 முதல் 14 இடத்தைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர்

சட்டீஸ்கர்

காங்கிரஸ் கட்சிக்கு 0 முதல் 2 இடமும், பாஜக கூட்டணிக்கு 9 முதல் 11 இடமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மோடி அலை

மோடி அலை

தேசிய அளவில் வீசிய மோடி அலை காரணமாக பாஜகவிற்கு நல்ல அறுவடை கிடைக்கும். அதேசமயம் காங்கிரஸ் குறைந்த இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வது அணியின் தயவு

3 வது அணியின் தயவு

குறைந்த இடங்களை வென்றாலும் மூன்றாவது அணியின் தயவை காங்கிரஸ் நாட வாய்ப்புள்ளது.

அதேசமயம், ஆட்சியமைக்க தேசிய ஜனநாயகக்கூட்டணியானது மம்தா, மாயாவதி, ஜெயலலிதாவின் தயவை நாட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

English summary
NDA alliance will win 272 seat in LS election 2014 Headlines Today post poll said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X