லோக்சபா தேர்தல்: பாஜக அணிக்கு 275; காங். அணிக்கு 111 இடங்கள்- என்.டி.டி.வி. கருத்து கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 275 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111 இடங்களும் கிடைக்கும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு.
லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்னும் பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் என்.டி.டி.வி. கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அணிக்கு 275
மொத்தம் உள்ள 543 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 275 தொகுதிகள் கிடைக்குமாம்.

பாஜகவுக்கு 226
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனித்து 226 இடங்களைக் கைப்பற்றுமாம்.

காங். அணிக்கு 111
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மொத்தம் 111 தொகுதிகள் கிடைக்குமாம்.

காங்கிரஸ்- 91
இதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தனித்து 92 இடங்கள் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு.

பாஜகவுக்கு ஏறுமுகம்
கடந்த பிப்ரவர்ரி மாத கருத்துக் கணிப்பில் பாஜக அணிக்கு 30.1% வாக்குகள் கிடைத்தன. தற்போது ஏப்ரல் முதல் வாரத்தில் 34.5% ஆக அதிகரித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக அணிக்கு 26.5% வாக்குகளே கிடைத்தன. அதாவது பாஜக அணிக்கு 230 கிடைக்கும் என்று பிப்ரவரி மாதம் கூறப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதத்தில் 275 இடங்களைக் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

காங்கிரஸுக்கு பின்னடைவு
இதேபோல் காங்கிரஸ் அணிக்கு பிப்வரி மாதத்தில் 26.8% வாக்குகள் கிடைத்தன. ஏப்ரல் மாதத்தில் 25.6% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் 33.2% வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 128 இடங்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 111 தான் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications