"நீட்" தேர்வில் தவறான வினாத்தாள்.. வெடித்த போராட்டம்.. 120 மாணவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட தேர்வு
ஜெய்பூர்: ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதால், தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை எனப்படும் என்டிஏ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு: அந்த வகையில் 2024 -2025-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு 23 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
வினாத்தாள் கசிவு?: இதற்கிடையே, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. காட்டுத்தீ போல பரவிய இந்த தகவல் நீட் தேர்வு எழுதியவர்க்ளுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்தது. ஆனால், இதை தொடர்ந்து நீட் நுழைவு தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தேசிய தேர்வு முகமை விளக்கம்: தேர்வில் முறைகேடு செய்ததாக பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும், தேசிய தேர்வு முகமை இதனை திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குனர் சாதனா பராசர் கூறியதாவது:-
"நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் முற்றிலும் ஆதாரம் இல்லாதது. எவ்வித அடிப்படையும் இல்லாதது" இவ்வாறு அவர் கூறியிருந்தார். இதற்கிடையே, ராஜஸ்தானில் உள்ள ஸ்வாய் மதோபோரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறு தேர்வு நடத்தப்பட்டது:இது குறித்து விளக்கம் அளித்து சாதனா பராசர் கூறியதாவது:- "ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது. இதனால், சில தேர்வர்கள் வினாத்தாளுடன் தேர்வு அறையை விட்டு வெளியே வந்தனர். எனினும், நீட் தேர்வின் நேர்மையில் எந்த சமரசமும் நடைபெறவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது" என்றார்.
ராஜஸ்தானில் குறிப்பிட்ட அந்த தேர்வு மையத்தில், தாங்கள் தேர்வு செய்த மீடியத்திற்கு பதிலாக வேறு மொழியில் வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே மாணவர்கள் வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தேசிய தேர்வு முகமையின் வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக சதனா பரசார் கூறிய போது,
எவ்வளவோ முயற்சித்தும்: "ராஜஸ்தானில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு மையத்தில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது. தேர்வு கண்காணிப்பாளர் எவ்வளவோ முயற்சித்தும் சில தேர்வர்கள் அறையை விட்டு வெளியே வந்து விட்டனர். அனைத்து தேர்வர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், தேசிய தேர்வு முகமை உறுதியாக உள்ளது" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications