Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங்கிலேயரை அதிர வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் புகழாஞ்சலி

தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை இன்று நாட்டு மக்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்து புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேதாஜியின் பிறந்த நாளைத் தேசிய வல்லமை தினமாக

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் வலிமை மிக்க தேசிய வீரருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர். #NetajiSubhashChandraBose #Netaji125 என்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் 'பராக்கிரம திவாஸ்' என்ற அதாவது தேசிய வல்லமை தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது.

சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி,இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் மத்திய அரசு முன்னதாக தெரிவித்திருந்தது.
தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் பிறந்தநாளை இன்று நாட்டு மக்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்து புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராமநாத் கோவிந்த்

ராமநாத் கோவிந்த்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளில் அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுதந்திர இந்தியா - ஆசாத் ஹிந்த் - என்ற தனது கடுமையான உறுதிப்பாட்டை நிறைவேற்ற அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் அவரை ஒரு தேசிய அடையாளமாக மாற்றியது. அவரது இலட்சியமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும் என்றும் ராம் நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

இந்தியருக்கு பெருமிதம்

இந்தியருக்கு பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெயந்தி அன்று அவருக்கு தலைவணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான் என்று பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

தலைமையேற்ற சுபாஷ்

தலைமையேற்ற சுபாஷ்

லண்டன் சென்று படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற நிலையிலும் அந்தப் பணியைத் தூக்கியெறிந்துவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர் சுபாஷ் சந்திர போஸ். பார்வைக் குறைபாடு என்று ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அந்த இளைஞர் பின்பு ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தினார்.

தமிழக பெண்கள்

தமிழக பெண்கள்

சிங்கப்பூரில் அவர் இந்திய தேசிய ராணுவத்துக்குத் தலைமையேற்றபோது ராணுவத்துக்காகத் தங்களது நகைகளைக் கழற்றிக் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்ப் பெண்கள். ராணுவத்தில் ஜான்சி ராணி பெயரிலான பெண்கள் படைப் பிரிவுக்குத் தலைமையேற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மையார்.

இந்தியா கேட்டில் நேதாஜி சிலை

இந்தியா கேட்டில் நேதாஜி சிலை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் சிறை இலக்கியங்களில் தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்றுள்ளன. நேதாஜியின் பிரம்மாண்ட கிரானைட் சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்திருந்தார்.மேலும்,அவரது பிரம்மாண்ட சிலை கட்டி முடிக்கும் வரை, கிரானைட் சிலை அமைக்க அடையாளம் காணப்பட்ட இடத்தில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலை இருக்கும் என்றும்,நேதாஜியின் பிறந்தநாளான இன்று முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை திறந்து வைப்பதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி,நேதாஜியின்125 வது பிறந்தநாளான இன்று அவரது ஹாலோகிராம் சிலை இந்தியா கேட் பகுதியில் பிரதமரால் திறந்து வைக்கப்படுகிறது.

தலைமையேற்ற சுபாஷ்

தலைமையேற்ற சுபாஷ்

லண்டன் சென்று படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற நிலையிலும் அந்தப் பணியைத் தூக்கியெறிந்துவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர் சுபாஷ் சந்திர போஸ். பார்வைக் குறைபாடு என்று ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அந்த இளைஞர் பின்பு ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+