சிமி தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்பியது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை- மபி அரசு
போபால் சிறையில் இருந்து சிமி தீவிரவாதிகள் தப்பியது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
போபால்: சிமி தீவிரவாதிகள் 8 பேர் சிறையில் இருந்து தப்பியது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) விசாரணை நடத்தும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் சிமி தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த தேவையில்லை என்றும் மபி அரசு கூறியுள்ளது.

போபால் சிறையில் சிறைக் காவலை படுகொலை செய்துவிட்டு நேற்று அதிகாலை 8 சிமி தீவிரவாதிகள் தப்பி ஓடினர். அவர்கள் தப்பி ஓடி போபால் புறநகரில் பதுங்கியிருந்த போது 'என்கவுண்ட்டரில்' 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக மபி அரசு அறிவித்தது.
[Read This: போபால் அருகே சிமி தீவிரவாதிகள் 8 பேரை சுட்டு வீழ்த்திய 'என்கவுண்டர்' வீடியோ.. மீடியாவில் வெளியானது]
இதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ காட்சியும் வெளியானது. ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே சிமி தீவிரவாதிகள் தப்பியது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்துள்ளார். ஆனால் சிமி தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த தேவை இல்லை என்றும் பூபேந்திரசிங் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications