சாதி ஓட்டுகளால் 20 ஆண்டுகளாக முதல்வர்! நிதிஷ்குமாரின் ஃபார்முலா இந்த முறை ஜெயிக்குமா? பீகார் நிலவரம்
பாட்னா: பீகார் முதல்வராக நிதிஷ்குமார் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறார். அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் இப்போது கேள்வி என்னவெனில், கடந்த காலங்களில் அவரது வெற்றிக்கு உதவிய ஃபார்முலா என்ன? இந்த முறையும் அது உதவுமா? என்பதுதான்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) -36.01%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) -27.12%
பட்டியல் சாதியினர் (SC) -19.65%
முற்பட்ட வகுப்பினர் (FC) -15.52%
பட்டியல் பழங்குடியினர் (ST) - 1.68%

பீகாரில் உள்ள சாதி வாக்குகள் மேற்குறிப்பிட்டவைதான். இதில் உட்பிரிவுகள் இருக்கிறது. அதாவது யாதவர்களும் OBC பிரிவுக்குள் வருவார்கள், அதேபோல குஷ்வாகாவும் OBC பிரிவுக்குள் வருவார்கள். உட்பிரிவின்படி சாதிவாரி வாக்குகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
யாதவர்கள் (OBC) - 14.26%
ரவிதாஸ் (SC) - 5.25%
குஷ்வாகா (OBC) - 4.21%
ஷேக் - இஸ்லாமியர்கள் (OBC/EBC)- 3.82%
பிராமணர் (FC) - 3.65%
ராஜ்புத் (FC) - 3.45%
முஷார் (EBC) - 3.08%
குர்மி (OBC) - 2.87%
பூமிஹார் (FC) - 2.86%
9 முறை முதலமைச்சர்
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் முறையாக பீகாரின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆனால், அவரது பதவிக்காலம் வெறும் 7 நாட்கள் மட்டுமே நீடித்தது. இதனை தொடர்ந்து 2005ம் ஆண்டு பீகாரின் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமார், 2014 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு பீகாரின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்ற நிதிஷ்குமார், இப்போது வரை முதலமைச்சராக தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து 9 முறை முதல்வராக நிதிஷ்குமார் நீடித்து வருகிறார்.
இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் அவர் பயன்படுத்திய ஃபார்முலாதான். சாதி வாக்குகள் பீகார் அரசியலில் புகுந்து விளையாடுகின்றன. அந்த வகையில் சாதி வாக்குகளை மையப்படுத்தி, வியூகம் வகுத்து நிதிஷ்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் இந்த முறை இந்த வியூகம் கை கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
லவ குசா கூட்டணி
கடந்த 2005ம் ஆண்டு நிதிஷ்குமார் பின்பற்றிய ஃபார்முலா மிக முக்கியமானது. இந்த தேர்தலில் குர்மி மற்றும் குஷ்வாஹஸ் சாதிகளின் வாக்கு வங்கியை நிதிஷ்குமார் ஒருங்கிணைத்தார். சதீஷ்குமார் ஓபிசி பிரிவில் வரும் குர்மி சமூகத்தை சேர்ந்தவர். அதே ஓபிசி பிரிவில் உள்ள குஷ்வாஹஸ் சமூகத்தை சேர்ந்த சாதி தலைவர்களை இணைத்துக் கொண்டு 'லவ்-குஷ்' என்கிற பெயரில் கூட்டணியை உருவாக்கினார். ராமனின் மகன் லவ மற்றும் குசாவின் பெயர்களை கொண்டு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. பீகாரின் யாதவர்களின் வாக்கு வங்கிக்கு எதிராக இந்த கூட்டணி அமைந்திருந்தது. எதிர்பார்த்ததை போல தேர்தலிலும் இந்த கூட்டணி பெரிய வெற்றியை கொடுத்தது.
நிதீஷ் குமார் வெறும் வெற்றிக்கு மட்டும் சாதிய வாக்குகளை பயன்படுத்தவில்லை. அதைத் தாண்டி சாதிய வாக்குகளை கைவிட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார். எனவே தனது 2010 வெற்றிக்கு பிறகு, அமைச்சரவையில் குர்மி, பூமிஹார், மகாதலித், யாதவர் சாதிகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தார். முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் குர்மி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சாதிக்கான பிரதிநிதியாக இவர் இருந்தார்.
அதேபோல பூமிஹார் சாதியைச் சேர்ந்த சுசில் மோடியை துணை முதலமைச்சராகவும், தலித் சமூகத்தை சேர்ந்த ஜிதன் ராம் மாஞ்சியை முக்கியமான பொறுப்பிலும், யாதவர் சமூகத்தை சேர்ந்த நந்தக் கிஷோர் யாதவ் உள்ளிட்டவரை பிரதான பொறுப்புகளிலும் தனது அமைச்சரவையில் வைத்திருந்தார்.
தேர்தல் யுக்தி
ஆனால் இந்த காலத்தில் பாஜகவுக்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன. எனவே 2014 மக்களவை தேர்தலை தனித்து போட்டியிட நிதிஷ்குமார் முடிவெடுத்தார். அந்த முடிவு தவறானது என காலம் உணர்த்துகிறது. தேர்தலில் இவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, தோல்விக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வெளிப்படையாக பார்த்தால் இது நியாயமான விஷயமாக தெரியும்.
ஆனால் இதிலும் ஒரு அரசியல் ஆட்டத்தை நிதிஷ் ஆடினார். அதாவது முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, தலித் சமூகத்தை சேர்ந்த ஜிதன் ராம் மஞ்சியை முதல்வராக நியமித்தார். தலித் சமூத்தை சேர்ந்த ஒருவர் பீகாரின் முதல்வராக வருது இது மூன்றாவது முறையாகும். எனவே மக்கள் மத்தியில் நிதிஷ்குமாரின் மீதான மதிப்பு அதிகரித்தது. இது அடுத்த தேர்தலுக்கு வெற்றிக்கு உதவியது.
சாதிவாரி கணக்கெடுப்பு
நிதிஷ்குமார் மட்டும் கிடையாது, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் சாதி வாக்கு வங்கியை அடிப்படையாக வைத்துதான் இயங்கி வருகின்றன. குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டு பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி பீகார் மக்கள் தொகையில் யாதவர்கள் 14.26%, குஷ்வாகாக்கள் (4.27%), பிராமணர்கள் (3.65%), ராஜ்பூத்கள் (3.45%), முசாஹர்கள் (3.08%), குர்மிகள் (2.87%), பூமிகர்கள் (2.86%) மற்றும் காயஸ்தாக்கள் (0.60%) இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றியமைத்தன. 2024 ராஜ்யசபா தேர்தலின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களில் உயர் சாதி (பிராமணர், ராஜ்பூத், பூமிகர்) உறுப்பினர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (யாதவ், குஷ்வாகா, வைஷ்யா) உறுப்பினர்களும் சமமாக இருந்தனர். இது சாதி பிரதிநிதித்துவத்தில் ஒரு திட்டமிட்ட சமநிலையைக் காட்டியது.
லோக்சபா தேர்தலில் சாதிவாரி வாக்காளர்கள்
2024 லோக்சபா தேர்தலிலும் சாதி செல்வாக்கு எதிரொலித்தது. பாட்னா சாகிப் தொகுதியில், காயஸ்தா சமூகத்தின் 21% வாக்கு வங்கி காரணமாக, பாஜக மற்றும் இந்தியா கூட்டணி இரண்டும் காயஸ்தா வேட்பாளர்களை (ரவி சங்கர் பிரசாத் மற்றும் லவ் சின்ஹா) நிறுத்தினர். பூமிகர்கள் ஆதிக்கம் செலுத்தும் நவாடா தொகுதியில் விவேக் தாக்கூர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேலும், பெகுசராய் தொகுதியில் கிரிராஜ் சிங் (பூமிகர்), சரண் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி (ராஜ்பூத்) மற்றும் பூர்ணியா தொகுதியில் ராஜேஷ் ரஞ்சன் (யாதவ்) ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.
இடதுசாரிகளின் பலம்
ஆக இதுதான் பீகாரின் சாதிவாரி அரசியல் களம். கடந்த காலங்களில் சாதியை மையமாக வைத்து நிதிஷ்குமார் போட்ட யுக்திகள் வெற்றிக்கு கை கொடுத்திருக்கின்றன. ஆனால் இந்த முறை இடதுசாரிகளின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் வாக்களிப்பதில்லை. அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் வாக்களிக்கிறார்கள் என்பதால், இந்தியா கூட்டணிக்கு பலம் சேர்ந்துள்ளது. இந்த மாற்றம் நிதிஷ்குமாரின் யுக்தியை பலவீனப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
நீதிமன்றத்துக்கு ஒருவரின் பெயரைச் சூட்ட முடியுமா? விஜய் வாக்குறுதியை விளாசும் இடும்பாவனம் கார்த்திக் -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ்











Click it and Unblock the Notifications