இந்தியாவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன? எஸ்பிஐ வங்கி தலைவர் விளக்கம்
Recommended Video

மும்பை: இந்தியாவில் பணத் தட்டுப்பாடு நிலவுகிறதா என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பண சப்ளை குறைந்துவிட்டது என்பது தவறான புரிதல். உண்மையிலேயே பண வினியோகத்தில் நாடு தழுவிய அளவில் ஒரு ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதுதான் சில இடங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட காரணம்.

வேளாண் பயிர் கொள்முதல் சீசன் இது என்பதால், பணத்திற்கான தேவை அதிகரித்து, இந்த ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கலாம். எனவேதான் பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் பணத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பணத்தட்டுப்பாடு காரணமாக ஏடிஎம்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனாலும், பணத்திற்கான தேவை இன்னும் அதிகரிக்கிறது. மக்கள் பொறுமை காத்தால், நிலைமை விரைவில் சீரடையும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications