"டிரோன் அட்டாக்".. ஏர்போர்ஸ் தளம் தாக்கப்பட்டது எப்படி? என்ஐஏ விசாரணையில் "புதிய" குழப்பம்.. பின்னணி
ஸ்ரீநகர்: ஜம்முவில் நடந்த தாக்குதல் எப்படி நடந்தது என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஜம்முவில் தாக்கத்தால் நடத்தப்பட்ட இடத்தில் டிரோன் துகள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் நேற்று முதல்நாள் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டுகள் பொருத்தப்பட்ட டிரோன்கள், ரிமோட் உதவியுடன் இயக்கப்பட்டு நேரடியாக ஜம்மு விமானப்படைத்தளம் நோக்கி வந்துள்ளது. ஜிபிஎஸ் உதவியுடன் துல்லியமாக விமானப்படை தளம் நோக்கி இந்த டிரோன் வந்து தாக்குதல் நடத்தி உள்ளது.

என்ன
இந்த நிலையில் ஜம்முவில் நடந்த தாக்குதல் எப்படி நடந்தது என்ற குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி வல்லுநர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜம்மு விமானப்படைத்தளத்தில் வெடிகுண்டு வெடித்த இரண்டு இடங்களிலும் இவர்கள் சோதனை செய்தனர். அங்கு கிடந்த பொருட்களை எடுத்து சென்று சோதனை செய்தனர்.

ஐஏடி குண்டு வகைகள்
இந்த குண்டுகள் ஐஏடி வகை குண்டுகளாக இருக்கும் என்று வல்லுநர்கள் முதல் கட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் குண்டுகள் வெடித்த இடம் எதிலும் டிரோன் துண்டுகள் கிடைக்கவில்லை. சின்ன துண்டு கூட கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டை கொண்டு வந்த டிரோன் எந்த விதமான சேதத்திற்கும் உள்ளாக்கவில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.

எஸ்கேப்
எனவே குண்டை கொண்டு வந்த டிரோன், அதை கீழே போட்டு, வெடிக்க செய்துவிட்டு, பறந்து சென்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் டிரோன் தாக்குதல்கள் மூலம் மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த டிரோன் வகை குண்டுகளை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகும் திறன் கொண்டதால் கண்டிப்பாக நவீன வகை டிரோனாக இருக்கும் வாய்ப்புள்ளது.

சிக்கல்
பொதுவாக நவீன வகை டிரோன்கள் சில 30-40 கிமீ தூரம் வரை கூட ரிமோட் மூலம் இயக்கும் ஆற்றல் கொண்டது. இப்படி ஒரு டிரோனை தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தி இருக்கலாம். இப்படிபட்ட டிரோன்களை இயக்க உயர்ந்த மாடி கட்டிடம் அல்லது நீண்ட நிலப்பரப்பு தேவை.

லான்ஜிங் பேட்
டிரோனை பறக்க வைக்க லான்ஜிங் பேட் அவசியம். இதன் காரணமாக ஜம்முவில் தாக்குதல் நடந்த இடத்தை சுற்றி 40 கிமீ சுற்றளவில் எங்கெல்லாம் இதுபோன்ற வசதி உள்ளது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். எங்கிருந்து டிரோன் அனுப்பப்பட்டு இருக்கும் என்று டிரேஸ் செய்து வருகிறார்கள்.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications