ஜார்க்கண்ட்டில் மோடி அலையா.. அப்படின்னா என்ன? எனக்குகு தெரியலையே... சிபுசோரன் மரண 'கலாய்'
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இம்முறை மோடி அலை எதுவும் வீசவில்லை என முன்னாள் முதல்வர் சிபுசோரன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்டவை இணைந்து மெகா கூட்டணி அமைத்தன. ஒரு சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாஜகவின் வெற்றிக்கு வேட்டு வைத்திருக்கிறது இக்கூட்டணி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தேர்தல் கள நிலவரம் தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான சிபுசோரன் அளித்துள்ள பேட்டி:
தேர்தல் கூட்டணியில் ஏராளமான குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைபிடிக்கிறோம். அனைத்து கட்சிகளும் தங்களது முயற்சிகளை வெளிப்படுத்துகின்றனர். லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல டிசம்பர் மாதம் நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் நாங்கள் நிச்சயம் வெல்வோம்.
பாஜகவை பொறுத்தவரை கணக்குப் போட்டுக் கொண்டு வேலை செய்கிறது. எந்த ஒரு கட்சிக்கும் சொந்த தலைமை வேண்டும். பிற கட்சிகளிடம் இருந்து கடன் வாங்கி ஒரு தலைமையை உருவாக்கி செயல்படுவது சரியானது அல்ல. லோக்சபா தேர்தலுக்குப் பின்னரும் எங்களது கூட்டணியில் கட்சிகள் இணைவதை வரவேற்கிறோம்.
தேர்தலுக்குப் பின்னர் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி யார் பிரதமர் என்பதை தேர்வு செய்வார்கள். ஜார்க்கண்ட்டில் மோடி அலை என்பதாக ஒன்று இல்லை. மோடி அலை என்றால் என்ன? என்னால் மோடி அலையை உணரவே முடியவில்லை.
இவ்வாறு சிபுசோரன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications