For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி நோ யோ-யோ.. பெங்களூரில் வரிசையாக மூடப்படும் பப்புகள்.. என்ன காரணம்?

பெங்களூரில் இருக்கும் பெரும்பாலான பப்புகள் இந்த மாத இறுதிக்குள் மூடப்பட உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூரில் வரிசையாக மூடப்படும் பப்புகள்...என்ன காரணம்?- வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் பெரும்பாலான பப்புகள் இந்த மாத இறுதிக்குள் மூடப்பட உள்ளது. பெங்களூர் மாநகர நிர்வாகிகளின் கண்டிப்பை அடுத்து, பல பப்புகள் மூடப்பட உள்ளது.

    பெங்களூர் எந்த அளவிற்கு குளிரான நகரமோ அந்த அளவிற்கு கொண்டாட்டமான நகரமும் கூட . சாம்பாரில் இனிப்பு சேர்ப்பது போல அவர்களின் கொண்டாட்டத்தில் இனிப்பு சேர்த்து இருப்பார்கள். இந்தியாவில் டெக்னோ தலைநகர் போல பெங்களூர் பப்புகளின் தலைநகரம் என்ற பெயரையும் பெற்று இருக்கிறது.

    இந்திரா நகர் தொடங்கி எம்.ஜி சாலை வரை பல பகுதிகள் பப்புகளால் நிரம்பி வழிகிறது. இரவு முழுக்க பப்புகளில் இளைஞர்கள் கொண்டாடுவது பெங்களூரில் சர்வசாதாரணமான ஒன்று.

    மூடுகிறார்கள்

    மூடுகிறார்கள்

    இந்தநிலையில்தான் பெங்களூர் தற்போது பப்புகளின் தலைநகர் என்ற பெயரை இழக்க இருக்கிறது. பெங்களூரில் மொத்தம் 323 பப்புகளை இந்த மாத இறுதிக்குள் மூட இருக்கிறார்கள். மொத்தம் நோட்டிஸ் அனுப்பப்பட்ட 393 பப்புகளில் 323ஐ தற்போது மூட இருக்கிறார்கள். மீதம் இருக்கும் பப்புகளை விரைவில் மூட இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

     காரணம் என்ன

    காரணம் என்ன

    கடந்த ஜனவரி மாதம், பெங்களூரில் உள்ள கேளிக்கை அரங்கங்களுக்கு எதிராக சில விதிமுறைகள் உச்சநீதிமன்றம் வெளியிட்டது. பெங்களூரில் பப், ஹோட்டல் உள்ளிட்ட கேளிக்கை அரங்கம் திறக்க வேண்டும், நடந்த வேண்டும் என்றால், 7 விதமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். மின்சார பாதுகாப்பு, அவசர பாதுகாப்பு, அனுமதி, கட்டிட உரிமை என்று 7 விதமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

    குடும்பத்தினர் எதிர்ப்பு

    குடும்பத்தினர் எதிர்ப்பு

    இதை தாக்கல் செய்யாத காரணத்தால், இந்த பப்புகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்த பப்புகளை எதிர்த்து அந்த பகுதியில் இருக்கும் குடும்ப மக்களும் குரல் கொடுத்து இருக்கிறார்கள். இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கிறது என்று குரல் கொடுத்து இருக்கிறார்கள். அதேபோல் பெங்களூரின் பெயரை இந்த பப்புகள் கெடுக்கிறது என்றும் குரல் கொடுத்துள்ளனர்.

    ஜென் இசட் புலம்பல்

    ஜென் இசட் புலம்பல்

    அதேசமயம் இந்த 323 பப்புகள் மூலம் சுமார் 3,000 பேர் வரை சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தினமும் இதை நம்பித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இசை கலைஞர்கள் தொடங்கி பாரில் வேலை செய்யும் வெயிட்டர்கள் வரை இதை நம்பித்தான் இருக்கிறார்கள். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் குரல் கொடுத்து இருக்கிறார்கள். இளைஞர்களின் புலம்பலும் ஒரு பக்கம் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

    English summary
    No more yo-yo in Bengaluru, Police is Shutting Down Hundreds of Pubs in the cool city.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X