காஷ்மீரில் மொகரம் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை! கடும் தடை உத்தரவுகள் அமல்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொகரம் தின ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் ஊரடங்கு போன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் நாளை மொகரம் தினத்தை கடைபிடிக்க உள்ளனர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் மொகரம் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
1980களில் ஜம்மு காஷ்மீரில் மொகரம் ஊர்வலங்களில் இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டன. மேலும் தீவிரவாதம் தலைதூக்கியதால் 1989-ல் மொகரம் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.

மொகரம் ஊர்வலம் அனுமதி இல்லை
இருப்பினும் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் ஶ்ரீநகர், பட்காம் மற்றும் பாரமுல்லாவில் மட்டும் இந்த ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இம்முறை ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு இடத்திலும் மொகரம் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

ஶ்ரீநகரில் கடும் கட்டுப்பாடுகள்
ஶ்ரீநகரில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முள்கம்பிகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பெருமளவு துணை ராணுவப் படையினரும் போலீசாரும் குவிக்கப்பட்டுளனர். துணை ராணுவத்தினர் டிரக் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

ஶ்ரீநகரில் கறுப்பு கொடிகள்
1990களுக்குப் பின்னர் இதுபோன்ற கட்டுப்பாடுகள் தற்போதுதான் விதிக்கப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஶ்ரீநகர் வீதிகளில் கறுப்பு கொடிகள், பதாகைகள் தொங்கவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக் காவலுக்கு மாற்றம்
மேலும் ஊரடங்கு உத்தரவு போன்ற தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மொகரம் நல்லெண்ண நடவடிக்கையாக முன்னாள் அமைச்சர் இம்ரான் அன்சாரி உள்ளிட்ட ஹோட்டல்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஷியா தலைவர்கள் சிலர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications