For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து வாஜ்பாய், அத்வானி, எம்.எம். ஜோஷி அதிரடி நீக்கம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுவில் இருந்து (ஆட்சி மன்ற குழு) மூத்த தலைவர்களான வாஜ்பாய், எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் மிக மூத்த தலைவர்களுக்காக மார்க் தர்ஷக் மண்டல் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு வாஜ்பாய், அத்வானி, ஜோஷி ஆகியோருக்கு அதில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு, மத்திய தேர்தல் குழு மற்றும் மார்க் தர்ஷக் மண்டல் ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் விவரத்தை அக்கட்சித் தலைவர் அமித்ஷா இன்று வெளியிட்டார்.

No Vajpayee, Advani, Joshi, in BJP Parliamentary Board, party makes Marg Darshak Mandal for them

பாஜகவின் புதிய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள்: அமித் ஷா, நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, அனந்த் குமார். தாவர்சந்த் கெலாட், சிவராஜ்சிங் சவுகான், ஜே.பி. நட்டா, ராம்லால்.

பாஜகவின் மத்திய தேர்தல் குழு: அமித்ஷா, நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, அனந்த் குமார், கெலாட், சிவராஜ் சிங் சவுகான், ஜே.பி. நட்டா, ராம் லால், ஜூயல் ஓரம், ஷாநவாஸ் ஹுசைன், விஜயா ரகத்கர்

புதிய அமைப்பு

பாரதிய ஜனதாவில் புதியதாக மூத்த தலைவர்களுக்கான ஒரு அமைப்பாக மார்க் தர்ஷக் மண்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்ட அடல் பிஹாரி வாஜ்பாய், ஒதுக்கப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

English summary
The Bharatiya Janata Party has dropped its patriarchs LK Advani, Murli Manohar Joshi and Atal Bihari Vajpayee from the Parliamentary Board. BJP leaders Shivraj Singh Chouhan and JP Nadda have been included in the Board.BJP President Amit Shah has created a separate body for party veterans and has called it the Marg Darshak Mandal. Vajpayee, Prime Minister Narendra Modi, Advani, Joshi and Home Minister Rajanth Singh have been included in this body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X