கபடி.. கபடி.. சேலை அணிந்து கொண்டு களத்தில் குதித்த வட மாநில சிங்கப்பெண்கள் - பரவும் வீடியோ
ராய்பூர்: சத்தீஸ்கார் மாநிலத்தில் சேலை அணிந்து கொண்டு பெண்கள் கபடி விளையாடும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பாராட்டி கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டி தற்போது சர்வதேச அளவில் பிரபலம் அடைந்து வருகிறது.
கபடி போட்டியை வைத்து பல்வேறு சர்வதேச தொடர்களும் நடத்தப்பட்டு வருகின்றன. உடல் வலிமையை காட்ட வேண்டிய விளையாட்டுக்களில் ஒன்றான கபடியில் பெண்களும் அசத்த முடியும் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகின்றனர்.

சேலையில் கபடி ஆடும் பெண்கள்
அதை நிரூபிக்கும் வகையில்தான் சத்தீஷ்கர் மாநிலத்தில் சேலையுடன் பெண்கள் கபடி விளையாடும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை கொண்ட வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவானிஷ் சரண் தான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் தீயாக பரவி வருகிறது.

கைதட்டி உற்சாகம்
கிராமப்பகுதியில் இந்த கபடி போட்டி நடைபெற்று வருகிறது. சுற்றிலும் பெண்கள் சிறுவர்கள் என பலரும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். அபோது களத்தில் வீரமங்கையாக செல்லும் பெண் ஒருவர் எதிர்முனையில் உள்ளவர்களை அவுட் செய்ய முயற்சித்து செல்கிறார். இறுதியில் ரைடராக செல்லும் அந்தப்பெண்ணை டிபெண்டர் அணி பிடித்து விடுகிறது. சுற்றியிருக்கும் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர்.

14 பாரம்பரிய விளையாட்டுகள்
நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற கேப்ஷனுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவானிஷ் சரண் இந்த பதிவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 54 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் லட்சக்கணக்கான பார்வையாளர்களுடன் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.

நெட்டிசன்கள் பாராட்டு
நெட்டிசன்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், போட்டி அற்புதமாக உள்ளது. கூடுதல் வலுவுடன் வாழ்க்கையில் சாதிக்க வாழ்த்துக்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தில் சத்தீஷ்கர் ஒலிம்பிக்ஸ் என்ற போட்டித்தொடரை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

தனித்தனியாக அனைத்து வயதினருக்கும்...
மொத்தம் 14 பாரம்பரிய விளையாட்டுக்கள் இந்த தொடரில் விளையாடப்படும். உள்ளூர் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் சத்தீஷ்கர் ஒலிம்பிக் போடிகள் நடத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவுகளாக அனைத்து வயதினருக்கும் இந்தப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications