கேரளா புதிய ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: கேரளா மாநில புதிய ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு கேரளா காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவத்தை, கேரள மாநில ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள ஆளுநராக சதாசிவத்தை நியமிப்பது தொடர்பாக எனது கருத்தை மத்திய அரசு கேட்கவில்லை என்று அம்மாநில உம்மண் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் புதிய ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் ஒரு மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரை நியமிப்பது முறையானதா என்பதை அரசியலைப்பு வல்லூனர்கள் ஆராய வேண்டும். இது தொடர்பாக மேலும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
முன்னாள் தலைமை நீதிபதி ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அத்தகைய பொறுப்பில் இருந்தவரை ஜனாதிபதிக்கு கீழ் உள்ள பொறுப்பில் எப்படி நியமிக்க முடியும் என்றார்.
மேலும் சதாசிவம் நியமனத்தில் மாநில பாரதிய ஜனதா கட்சியினரும் மகிழ்ச்சியின்றி உள்ளனர். மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பதற்கு முன்னதாக கட்சியின் மத்திய தலைவர்கள், மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றார் சுதீரன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications