வங்கிக்கே செல்ல வேண்டாம்.. வந்துவிட்டது அனைத்து வசதிகளும் கொண்ட ஏடிஎம் மிஷின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏடிஎம் தயாரிப்பாளர் மற்றும் சேவை வழங்குனரான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் வகையிலான ஏ.டி.எம். மெஷின்களை வடிவமைத்துள்ளது. இப்போது, உங்கள் ஏடிஎம் அட்டையை வங்கிக்கு போகாமலிருக்கலயே பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இந்த இயந்திரம் வங்கிகளில் உள்ள பல வசதிகளை தன்னிடம் கொண்டுள்ளது. இந்த வகை ஏடிஎம்களின் செலவு தலா 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை இருக்கும். இந்த இயந்திரங்கள் SS32, SS22, SS83 மூன்று வகைகளாக இருக்கும். இந்த இயந்திரங்கள் வழக்கமான ஏ.டி.எம். கள் போலவும் செயல்படும் ஆனால் சில கூடுதல் வசதிகள் உள்ளன.

Now, your ATMs may open bank accounts, clear cheques

இதில் முக்கிய அம்சம், ஏடிஎம் மூலமே வங்கிக் கணக்கை திறக்கலாம். அல்லது உங்கள் காசோலைகளை கிளியர் செய்ய முடியும். இந்த இயந்திரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு அம்சத்தின்படி, உடனடி வங்கி கணக்குகள், பற்று அட்டைகள், தானியங்கி கையொப்ப சரிபார்ப்பு, நிதி பரிமாற்ற, பில் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் ஆகியவற்றை செய்ய முடியும்.

இதுபோன்ற ஏடிஎம் மிஷின்கள் தற்போது 3 இடங்களில் சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ளதாக என்.சி.ஆர் கார்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ATM manufacturer and service provider NCR Corporation introduced a new multi-channel solution to the customers which will facilitate more functions on an ATM. Now, you may get your ATM card even without going to bank.
Please Wait while comments are loading...