For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபாவில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை: புதிய சட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தாலும் ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் புதிய சட்டங்களை தோழமைக் கட்சிகளையே நம்ப வேண்டிய நிலை இருக்கும்.

லோக்சபாவில் எம்.பிக்கள் எண்ணிக்கை 543, அதேபோல் ராஜ்ய சபா எம்.பிக்கள் எண்ணிக்கை 240. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற வேண்டும். அப்போதுதான் அது நடைமுறைக்கு வரும்

பெரும்பான்மை இல்லை.

பெரும்பான்மை இல்லை.

இப்போது லோக்சபாவில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை பெற்றாலும் ராஜ்யசபாவில் அந்த கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை. பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் ராஜ்யசபாவில் காங்கிரஸ் பலம் 68. ஆனால் பாரதிய ஜனதாவுக்கு 46 எம்.பிக்கள்தான் உள்ளனர்

121 எம்.பிக்கள் தேவை

121 எம்.பிக்கள் தேவை

ராஜ்யசபாவில் மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற 121 எம்.பிக்கள் ஆதரவு தேவை. ராஜ்யசபாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லை.

அன்று நெருக்கடி கொடுத்த பாஜக

அன்று நெருக்கடி கொடுத்த பாஜக

இந்த நிலையில்தான் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. இதனாலேயே ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு ராஜ்யசபாவில் பாஜக நெருக்கடி கொடுத்து வந்தது.

நிறைவேறாத 68 மசோதாக்கள்

நிறைவேறாத 68 மசோதாக்கள்

காங்கிரஸ் அரசு ராஜ்யசபாவில் சில மசோதாக்கள் கொண்டு வந்த போது அதற்கு 102 எம்.பிக்கள் ஆதரவுதான் கிடைத்தது. இதனால் 68 மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்தன.

நிலுவையில் 60 மசோதாக்கள்

நிலுவையில் 60 மசோதாக்கள்

மேலும் நீதித்துறை நியமனங்கள், மருந்து மற்றும் அழகு பொருட்கள் சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 60 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிறைவேறாமல் நிலுவையில் கிடக்கிறது. இப்போது அதே நிலையை பாரதிய ஜனதா எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

பலம் என்ன?

பலம் என்ன?

ராஜ்யசபாவில் கூட்டணி கட்சிகளைச் சேர்த்தால் காங்கிரசின் பலம் 78 ஆகவும், பாரதிய ஜனதாவின் பலம் 61 ஆகவும் இருக்கும். இதர கட்சிகளின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது.

பயனில்லை

பயனில்லை

2015ம் ஆண்டுக்குள் இன்னும் சில மாநிலங்களில் இருந்து காலியாகும் எம்.பிக்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. அது காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் பாரதிய ஜனதாவின் எண்ணிக்கை உயர வாய்ப்பு இல்லை.

முன்னாள் கூட்டணி கட்சிகளுக்கு வலை

முன்னாள் கூட்டணி கட்சிகளுக்கு வலை

பாரதிய ஜனதா ஆட்சி அமைத்து அது கொண்டு வரும் சட்டம் நிறைவேற வேண்டுமானால் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆதரவை அக்கட்சி நாடும். அந்த அடிப்படையில்தான் தேர்தல் பகையை மறந்து தனது முன்னாள் கூட்டணி கட்சிகளுக்கு பாரதிய ஜனதா வலை விரிக்கிறது.

அதிமுக, பிஜூ ஜனதா தளம் பலம்

அதிமுக, பிஜூ ஜனதா தளம் பலம்

ராஜ்யசபாவில் அ.தி.மு.க.வுக்கு 10 எம்.பிக்கள் உள்ளனர். பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 6 எம்.பிக்களும் உள்ளனர். சுயேட்சைகள் 9 பேர், நியமன எம்.பிக்கள் 9 பேர் உள்ளனர். இவர்களின் ஆதரவை பெறுவதில் மும்முரம் காட்டுகிறது பாஜக.

English summary
The Bharatiya Janata Party-led National Democratic Alliance’s political management skills may be put to the test in the Rajya Sabha if it manages to form the next government. With just 64 members in a House of 240, the NDA may find it difficult to get its legislative agenda through in Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X