டெல்லியில் மீண்டும் அமலுக்கு வருகிறது வாகனக் கட்டுப்பாடு: கெஜ்ரிவால் அறிவிப்பு !
டெல்லி: டெல்லியில் மீண்டும் வரும் ஏப்ரல் 15ம் முதல் 30 வரை மீண்டும் வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் புகை மாசு அதிகரித்துக் கொண்டே போவதால் அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் டெல்லி அரசு இறங்கியுள்ளது. அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக ஒற்றைப் படை பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ஒரு நாளும், இரட்டைப் படை எண் வாகனங்களுக்கு ஒரு நாளும் என வாகனங்களை ஓட்டுவதற்கான புதிய திட்டத்தை ஜனவரி 1-ம் தேதி முதல் 15 வரை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த உத்தரவு டெல்லி வாகனங்களுக்கு மட்டும் பொருந்தாது என்றும் பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பெண்களால் ஓட்டப்படும் கார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆம்புலன்சு வண்டிகள், தீயணைப்பு வண்டிகள், ஆட்டோ ரிக்ஷா, பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வி.ஐ.பி. வாகனங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.
சோதனை முயற்சியாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. இந்த சோதனை முயற்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், ஒற்றைப்படை இரட்டைப்படை கார்கள் திட்டத்தின் அடுத்த சோதனை முயற்சி ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும்.என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications