65 ஆம்புலன்ஸ்கள்.. 3 தேசிய பேரிடர் மீட்பு குழு.. போர்க்களமாக காட்சியளிக்கும் ரயில் விபத்து ஸ்பாட்
புவனேஸ்வர்: ஒடிசாவில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் மீது ஹவுரா மற்றும் ஒரு சரக்கு ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 50 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 350க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படும் ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்பதால் களத்தில் ஓடிஆர்ஏஎப் மற்றும் என்டிஆர்எப் படையினர் மீட்பு பணியை விரைவுப்படுத்தி உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே இன்று இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.

இதற்கிடையே அந்த பெங்களூரில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது. அதேபோல் சரக்கு ரயில் ஒன்றும் மோதியது. இதில் தற்போது வரை 50 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 350க்கும் அதிகமானவர்கள் காயம்டைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்பட உயரதிகாரிகள் விரைந்துள்ளனர். ஒடிசா மாநில அரசும் விரைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் விபத்து நடந்து வரும் இடத்துக்கு ஒடிசா அரசு சார்பில் 4 ஒடிசா மாநில பேரிடர் அதிவிரைவு மீட்பு குழுவினர்(ஓடிஆர்ஏஎப்), 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் (என்டிஆர்எப்) விரைந்து மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

மேலும் மீட்பு பணியில் மொத்தம் 65 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில் விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் டாக்டர்கள் மருத்துவமனைகளில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பிற மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் விரைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications