ஒடிஷா ரயில் விபத்து: 89 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை - காத்திருக்கும் உறவுகள்!
புவனேஸ்வர்: 288 பேரை பலி கொண்ட ஒடிஷா ரயில் விபத்தில் இன்னமும் 89 உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. ஒடிஷா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் தொடருவதால் கண்ணீருடன் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் மூன்றும் ஒடிஷாவின் பாலசோர் அருகே விபத்துக்குள்ளாகின. உலகையே உறைய வைத்த இந்த சில நிமிட விபத்துகளால் மொத்தம் 288 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை 89 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருக்கின்றன.

உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளமே காண இயலாத அளவுக்கு சிதைந்துள்ளன. இந்த உடல்கள் புகைப்படங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இறந்தவர் தங்களது உறவுதான் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒடிஷா ரயில் விபத்தில் 48 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர். இவர்களது உடல்கள் பெரும்பாலும் கருகிய நிலையில் உள்ளன. இதுவும் உறவினர்களால் அடையாளம் காணப்பட முடியாத நிலைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 43 பேர் இந்த ரயில் விபத்தில் மரணம் அடைந்தனர். இவர்களை அடையாளம் காண பீகார் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து உறவினர்கள் ஒடிஷாவின் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ஒடிஷா ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் இன்னமும் சிகிச்சை பெறுகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். மொத்தம் 1,100 பேர் காயமடைந்தனர். 900 பேர் வீடு திரும்பி உள்ளனர். ஆனால் இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காணுவதில்தான் சிக்கல் தொடருகிறது என்கின்றனர்.

இதனிடையே இணையதளம், சமூக வலைதளம் உள்ளிட்டவைகள் மூலமாக இறந்தவர்களின் படங்கள் வெளியிடப்பட்டு அடையாளம் காண உதவுமாறு அரசு தரப்பில் தொடர்ந்து வேண்டுகோள் முன்வைக்கப்பட்டும் வருகிறது. இருப்பினும் உருக்குலைந்த உடல்களை அடையாளம் காண முடியாத நிலையே நீடிக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications