கடும் குளிர்.. நடுங்கும் உடல்..அயோத்தி ராமர் கோவிலில் 2வது நாளாக குவியும் பக்தர்கள்..வீடியோ பாருங்க
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில் இன்று 2வது நாள் தரிசனத்துக்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உடல் நடுங்க போர்வையை மூடிக்கொண்டு ஏராளமான மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடந்த 18 ம் தேதி கோவில் 5 வயது நிரம்பிய பால ராமர் சிலை நிறுவப்பட்டது.

இந்த சிலைக்கு கடந்த 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. கும்பாபிஷேக நாளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு நேற்று முதல் பொதுமக்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். மேலும் காலை 6.30, மதியம் 12 மணி, இரவு 7.30 மணிக்கு என 3 வேளை ஆரத்தி நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதிலும் மக்கள் பாஸ் பெற்று பங்கேற்கலாம்.
#WATCH | Ayodhya, Uttar Pradesh: On the second day after the Pran Pratishtha, devotees gather in huge numbers at Rampath to have darshan of Shri Ram Lalla pic.twitter.com/JMI3AvYPca
— ANI (@ANI) January 24, 2024
நேற்றைய தினம் முதல் நாள் என்பதால் கூட்டம் என்பது கட்டுக்கடங்காமல் இருந்தது. காலை 3 மணி முதல் மக்கள் குவிந்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் மக்கள் கூட்டத்தை சரிசெய்தனர். இதையடுத்து நேற்று ஒரேநாளில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ராமரை தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் 2வது நாளான இன்றும் ராமர் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
‛30 ஆண்டுக்கு முன்பே கூறிவிட்டேன்’.. அயோத்தி ராமர் கோவில் பற்றி ஒரே வார்த்தையில் கமல்ஹாசன் பதில்
தற்போது அயோத்தியில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஆனால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் இன்று அதிகாலை முதல் கோவில் அருகே திரண்டனர். குளிர் அதிகமாக இருந்ததால் பலரும் கம்பளி போர்வை கொண்டு மூடிக்கொண்டு வரிசையில் நின்றனர். மக்கள் அதிகமாக இருக்கும் நிலையில் பலரும் ‛ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டு காவியை கொடியை கையில் ஏந்தியபடி தரிசனம் செய்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
‛உயிருடன் இருக்க முடியாதே’.. மோடி 11 நாள் விரதம் இருந்தாரா? டாக்டர் உரையாடலால் வீரப்ப மொய்லி டவுட்
இதற்கிடையே தான் அதிகப்படியான பக்தர்கள் வருகையால் அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உத்தர பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில், ‛‛கூட்டம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாட்டை இன்னும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.












Click it and Unblock the Notifications