For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருமம்.. ஸ்கர்ட் அணியும் மாணவிகள் காலை பார்க்க பள்ளிகள் முன்பாக கூடும் காமுகர்கள்.. வாசகர் குமுறல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    வித்தியாசமான உத்தரவுகள் பிறப்பித்த பள்ளி நிர்வாகம்- வீடியோ

    பெங்களூர்: தனியார் பள்ளிகளில் மாணவிகள் தொடை தெரிய ஸ்கர்ட் அணிய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதை பார்க்கவே பள்ளிகள் முன்பாக காமுகர்கள் கூட்டம், கூடுகிறது என்று குமுறுகிறார் நமது வாசகர் ஒருவர்.

    புனேயிலுள்ள MIT Group குழுமத்தை சேர்ந்த பள்ளியொன்றில், மாணவிகள் முட்டிக்கு மேல் ஸ்கர்ட் அணிய வேண்டும் என்பது, வெள்ளை அல்லது தோல் வண்ணத்தில்தான் உள்ளாடைகளை அணிய வேண்டும், டார்க் வண்ணத்தில் அணிய கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து, மாணவிகளின் பெற்றோர் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

    இந்த செய்தியை 'ஒன்இந்தியாதமிழ்' வெளியிட்டது. அந்த செய்தியில் கவுதம் என்பவர் தனது பின்னூட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அதில், "இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. பெங்களூரில் அல்சூரில் போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு அருகிலேயே மாணவிகள் இதுபோன்ற ட்ரெஸ்ஸைத்தான் அணிகிறார்கள். மேனேஜ்மெண்டில் கேட்டால் தன்னம்பிக்கைக்காக என்று கதை சொல்லுகிறார்கள்.

    மாணவர்களோ புள் கை சட்டை, பேண்ட், கழுத்தில் டை, காலில் ஷூ, ஆனால் மாணவிகள் தொடை தெரிய டிரஸ். பள்ளி ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் தொடையை பார்க்கவே கூட்டம். இதை தெரிந்தும் கண்டும் காணாமலும் பள்ளி நிர்வாகம்" என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    அல்சூரில் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. அதன் அருகேயுயள்ள பள்ளிகளில் காலை, மாலை வேளைகளில் காமுகர்கள் கூட்டம் இதற்காகவே கூடுவதாக அங்குள்ள மக்களும் தெரிவிக்கிறார்கள். பெங்களூர் உட்பட பல நகரங்களிலும் இதுபோன்ற ஆடை கட்டுப்பாடுகளை மாணவிகளுக்கு விதிப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    An Oneindia Tamil reader says, many girl students in Bengaluru asked to wear short skirts by the school authorities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X