பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா.. எவ்வளவு தூரம் உள்ளே சென்று நம் ஏவுகணை தாக்கியது தெரியுமா? செம மாஸ்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் முப்படைகள் சார்பில் இன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன? நம் நாட்டின் ஏவுகணைகள் எவ்வளவு தூரம் வரை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல்களை நடத்தின? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக இன்று நம் நாட்டின் சார்பில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் 10 குடும்ப உறுப்பினர்கள் இறந்துள்ளனர். இந்த தாக்குதல் என்பது முப்படைகளையும்
ஒருங்கிணைத்து நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்றைய தாக்குதலில் நம் ஏவுகணை எவ்வளவு தூரம் வரை பாகிஸ்தான் உள்ளே புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தன. 4 இடங்கள் பாகிஸ்தானில் இருந்தன.
ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் பஹவால்பூரில் உள்ள மார்கஸ் சுபன் அல்லா முகாம், தெஹ்ரா காலனில் உள்ள சர்ஜால் முகாம், கோட்லியில் உள்ள மார்கஸ் அப்பாஸ் முகாம், முசாபராபாத்தில் உள்ள சைதினா பிலால் முகாம் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. அதேபோல் லஷ்கர் இ தொய்பாவுக்கு சொந்தமான முரித்கேவில் உள்ள மார்கஸ் தொய்பா, பர்னாலாவில் உள்ள மார்கஸ் அஜில் ஹதித் முகாம், முசாபராபாத்தில் உள்ள ஷாவாய் நல்லா முகாம், ஹிஜாபுல் முஜாகிதீன் அமைப்பின் சியால்கேட்டில் உள்ள மெக்மூனா ஜோயா, கோட்லியில் உள்ள மாஸ்கர் ரஹீல் ஷாகித் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன.
நம் ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்ட கோட்லி கேம்ப் என்பது எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 15 கிலோமீட்டர் தொலைவிலும், பர்னாலா கேம்ப் என்பது 10 கிலோமீட்டர் தொலைவிலும், சர்ஜால் கேம்ப் என்பது 8 கிலோமீட்டர் தொலைவிலும், மெக்மூனா கேம்ப் என்பது 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பிலால் கேம்ப் அமைந்துள்ள தொலைவு பற்றிய விபரம் வெளியாகவில்லை.
அதேபோல் பாகிஸ்தானுக்குள் உள்ள தாக்குதல் நடந்த 4 இடங்களை எடுத்து கொண்டால் பஹவால்பூர் பாகிஸ்தானில் உள்ளே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேபோல் முரித்கே மற்றும் சவாய் கேம்ப் ஆகியவை பாகிஸ்தானில் இருந்து தலா 30 கிலோமீட்டர் தொலைவிலும், குல்பூர் பாகிஸ்தானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து இருந்தன. இதில் முரித்கே என்பது டெல்லியில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ளது. டெல்லியில் இருந்து இங்கு செல்ல வேண்டும் என்றால் விமானத்தில் ஒரு மணிநேரம் வரை ஆகும். ரோடு வழியாக செல்ல வேண்டும் என்றால் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்.
பஹல்பூரை எடுத்து கொண்டால் அது டெல்லியில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்களுக்கு பெயர் பெற்றது. அதேபோல் கோட்லியை எடுத்து கொண்டால் அது டெல்லியில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு மலைப்பாங்கான பகுதியாகும். இந்தியா -பாகிஸ்தான் மோதலின்போது இந்த இடம் அதிக முக்கியத்துவம் பெறும். மேலும் முஷாபராபாத்தை எடுத்து கொண்டால் இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் உள்ளது. இது டெல்லியில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ளது. அதேபோல் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு இந்த இடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications