For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாய சீர்திருத்தங்கள்... தவறான தகவல்களை கூறி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசைதிருப்புகின்றன: மோடி

Google Oneindia Tamil News

கட்ச்: விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பாக தவறான தகவல்களை கூறி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்புகின்றன என பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

குஜராத் கட்ச் பிராந்தியத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:

கால மாற்றத்துக்கு ஏற்ப உலக அளவில் சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். கட்ச் பிரதேசத்தின் விவசாயிகள் இன்று பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். நமது விவசாயிகளின் புதுமையான வழிகள் மீதான ஆர்வத்தை இது காட்டுகிறது

மக்கள் நலனுக்காக ஈகோவை விட்டுகொடுத்து ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார்: கமல்ஹாசன்மக்கள் நலனுக்காக ஈகோவை விட்டுகொடுத்து ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார்: கமல்ஹாசன்

சாதித்த குஜராத்

சாதித்த குஜராத்

கடந்த இருபது ஆண்டுகளாக, வேளாண்மை, பால்பண்ணை தொழில், மீன் வளம் ஆகிய துறைகளில் குஜராத் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. விவசாயிகளையும், கூட்டுறவு சங்கங்களையும் அதிகாரப்படுத்தியதை குஜராத் செய்துள்ளது.

திசை திருப்பும் எதிர்க்கட்சிகள்

திசை திருப்பும் எதிர்க்கட்சிகள்


விவசாய சீர்திருத்தங்கள் குறித்து தவறான தகவல்களைக் கூறி விவசாயிகள் திசை திருப்பப்படுகின்றனர். விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் பல ஆண்டுகளாக கோரி வந்தவையே, விவசாய சீர்திருத்தங்களாக தற்போது வடிவம் பெற்றுள்ளன. மத்திய அரசு எப்போதும் விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது.

குஜராத்தின் முந்தைய நிலை

குஜராத்தின் முந்தைய நிலை

குஜராத் மக்கள் இரவு உணவின் போது மின்சாரம் இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வைத்த காலம் ஒன்று இருந்தது. குஜராத்தில் இன்று பெரும் மாற்றம் ஏறுபட்டுள்ளது. இன்றைய குஜராத் இளைஞர்கள், முந்தைய வசதியற்ற நாட்கள் பற்றி அறிந்திருக்கவில்லை.

கட்ச் பெருவளர்ச்சி

கட்ச் பெருவளர்ச்சி

பயங்கர நிலநடுக்கத்திற்கு பின்னர் கட்ச் பகுதி அடைந்துள்ள நான்கு மடங்கு வளர்ச்சி குறித்து, ஆராய்ச்சியாளர்களும், பல்கலைக்கழகங்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 21-ம் நூற்றாண்டில், எரிசக்தி பாதுகாப்பும், நீர் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை. தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க கட்ச் பகுதிக்கு நர்மதை தண்ணீரைக் கொண்டு வருவது பற்றி முந்தைய காலங்களில் கேலி பேசியவர்கள் உண்டு. இன்று நர்மதை தண்ணீர் கட்சை வந்தடைந்துள்ளது, கட்ச் முன்னேறி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
Prime Minister Narendra Modi said that the opposition is now instigating and misleading the farmers on Agri Reforms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X