மோடி கோட் 2வது நாள் ஏலம்.. தொகை ரூ. 1.41 கோடியாக உயர்ந்தது!
சூரத்: பிரதமர் மோடியின் பெயர் பொறித்த கோட்டின் ஏலத்தின் இரண்டாவது நாள் இறுதியில் ரூ. 1.41 கோடிக்கு கோட் ஏலம் கேட்கப்பட்டுள்ளது. நாளையுடன் ஏலம் முடிவடைகிறது.
சூரத்தில் இந்த ஏலம் நடந்து வருகிறது. ஒபாமா டெல்லி வந்தபோது இந்த கோட்டைத்தான் போட்டிருந்தார் மோடி. அதைத்தான் தற்போது ஏலம் விடுகின்றனர். இதுபோக மோடிக்கு வந்த பல்வேறு பரிசுப் பொருட்களையும் கூட ஏலத்தில் விட்டுள்ளனர்.
நேற்று காலை ஏலம் தொடங்கியது. பாஜகவைச் சேர்ந்த ராஜுபாய் அகர்வால் என்பவர் கோட்டை, ரூ. 51 லட்சத்திற்கு ஏலம் கேட்டு தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சுரேஷ் அகர்வால் என்ற ஜவுளி அதிபர் ரூ. 1 கோடிக்கு அதைக் கேட்டார். அப்படியே மெல்ல மெல்ல ரேட் கூடி கடைசியாக ரூ. 1.21 கோடிக்கு வந்து நின்றது. இந்தத் தொகைக்குக் கேட்டவர் தொழிலதிபர் ராஜேஷ் ஜூனேஜா.
இன்று 2வது நாள் ஏலம் தொடர்கிறது. இன்று காலை குளோபல் பிரண்ட்ஸ் குரூப், ரூ. 1.25 கோடிக்கு ஏலம் கேட்டது. அதைத் தொடர்ந்து பிற்பகலில் சூரத்தைச் சேர்ந்த முகேஷ் படேல் என்பவர் ரூ. 1.39 கோடிக்கு ஏலம் கேட்டார். மாலையில் கோமல்காந்த் சர்மா என்பவர் ரூ. 1.41 கோடிக்கு ஏலம் கேட்டார்.
நாளை மாலை 5 மணிக்கு ஏலம் முடிவுக்கு வருகிறது. அப்போது அதிக விலை கேட்டவருக்கு இந்த கோட் அளிக்கப்படும்.

அகமதாபாத்தில் உள்ள ஜேட் ப்ளூ டெய்லரிங் நிறுவனம்தான் இந்தக் கோட்டை தைத்தது. இதுதான் மோடி குர்தாவுக்கும் காப்பிரைட் வாங்கி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 2வது நாள் ஏலம் தொடர்கிறது. இன்று காலை குளோபல் பிரண்ட்ஸ் குரூப், ரூ. 1.25 கோடிக்கு ஏலம் கேட்டது. அதைத் தொடர்ந்து பிற்பகலில் சூரத்தைச் சேர்ந்த முகேஷ் படேல் என்பவர் ரூ. 1.39 கோடிக்கு ஏலம் கேட்டார்.
இதற்கிடையே, மோடி கோட் ஏலம் விடப்படுவதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த நிலையில் பாஜகவின் கிரண் பேடி நேற்று மாலை ஒரு டிவிட் போட்டார். அதில், பிரதமரின் கோட் என்பது விலை மதிப்பில்லாதது. மரியாதைக்குரியது. எனவே அனைத்து இந்தியர்களும், என்ஆர்ஐகளும் இந்த ஏலத்தில் இணைந்து இந்த கோட்டை மிகப் பெரிய விலைக்கு ஏலத்தில் எடுத்து நல்ல விஷயத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஏலத்தில் கிடைக்கும் தொகையை கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு அளிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
மனைவி கொடுமை தாங்க முடியலை! என்னை கருணைக் கொலை செய்துடுங்க! குமுறும் கணவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications