மரத்தில் ஏறிய போட்டோகிராபர்! தீவிரவாதிகள் உள்ளே இறங்கியது இப்படிதான்! பஹல்காம் தாக்குதல்! புது தகவல்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த தாக்குதல் நாட்டை உலுக்குவதாக அமைந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடி தர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் குறித்து சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.. இந்த நாசவேலை தொடர்பாக என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மோசமான தாக்குதல் நடந்தது. அங்கு பைசரன் பள்ளத்தாக்கு என்ற அழகிய பகுதியில் இயற்கை அழகைச் சுற்றுலாப் பயணிகள் ரசித்து வந்தனர். அப்போது திடீரென அந்தப் பகுதியில் நுழைந்த தீவிரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.

காஷ்மீர் படுகொலை
இந்தச் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் கடுமையாகக் காயமடைந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலரும் தங்கள் கண்டங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவாக இருந்திருக்கலாம் எனச் சொல்லப்படும் நிலையில், பாகிஸ்தான் மீது கடுமையான பதிலடி தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22ம் தேதி அந்தக் கொடூரமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் எப்படி பைசரன் பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
22 மணி நேரம்
அதாவது அந்தப் பயங்கரவாதிகள் கோகர்நாக் காடுகளிலிருந்து சுமார் 20 முதல் 22 மணி நேரம் வரை மலை மற்றும் காட்டுப் பகுதிகளில் நடந்து பைசரன் பள்ளத்தாக்கை அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் தாக்குதலின்போது இருவரது மொபைல்களை அவர்கள் பறித்துள்ளனர். அதில் ஒன்று உள்ளூர்வாசி ஒருவருடையது.. மற்றொன்று சுற்றுலாப் பயணிக்குச் சொந்தமானது எனத் தெரிகிறது. தாக்குதலின் போது இருவரது செல்போனை பயங்கரவாதிகள் பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் மொத்தம் நான்கு தீவிரவாதிகள் ஈடுபட்டதாகவும் அவர்களில் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் ஒரு பயங்கரவாதி உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர். உள்ளூரில் சேர்ந்தவன் அடில் தோகர் என்று முதற்கட்ட விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உள்ளூர் தீவிரவாதி
இந்த அடில் தோகரை சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் மூளைச்சலவை செய்து தீவிரவாதியாக மாற்றியுள்ளனர். கடந்த 2018இல் ஹிஸ்புல் முஜாஹிதீனில் இணைந்த தோகர், உரிய ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்குச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. அங்கு வைத்தே அவனுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் போர்ப் பயிற்சி கொடுத்துள்ளனர்.
கடந்த 2024ல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்குத் திரும்பிய தீவிரவாதி அடில் தோகர், அதன் பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தொடர்ந்து உதவி வந்துள்ளான். பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதிகளுக்குத் தேவையான பணம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்டவற்றைத் தருவது மட்டுமின்றி காஷ்மீரில் வழிகாட்டியாகவும் அடில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் நாசவேலை
பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் இருந்த இடத்தில் சில கடைகள் இருந்துள்ளன. அந்தக் கடைகளுக்குப் பின்னால் இருந்தே இரு பயங்கரவாதிகள் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சுற்றுலாப் பயணிகளைத் திடீரென அவர்கள் சுட்டுள்ளனர். அங்கு வைத்து மட்டும் 4 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இதைப் பார்த்தவுடன் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அப்போது மற்ற இரண்டு பயங்கரவாதிகள் ஜிப்லைன் பகுதிக்கு அருகே நின்று கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
போட்டோகிராபர்
இந்தச் சம்பவத்தை அங்கு உள்ளூரைச் சேர்ந்த போட்டோகிராபர் ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். இந்தத் தாக்குதலின் போது ஒரு மரத்தின் மேல் அமர்ந்து, அவர் என்ன நடந்தது என்பதைப் பதிவு செய்துள்ளார். இந்தத் தாக்குதல் எப்படித் தொடங்கி எப்படி நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள விசாரணை அதிகாரிகளுக்கு இந்த வீடியோக்கள் முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது.
தீவிரவாதத் தாக்குதல் நடந்தவுடன் காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியுள்ளனர். அதேநேரம் இது தீவிரவாதிகளின் நாச செயல் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு தேசியப் புலனாய்வு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. என்ஏஐ மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை முதல் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
குறிப்பாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணையை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகள் எப்படி இந்தத் தாக்குதலை நடத்தினர்... அவர்கள் எந்த வழியாக உள்ளே வந்தனர்.. எந்த வழியாக வெளியே சென்றனர் என்பது குறித்த தகவல்களைப் பெற விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்புப் படை ஏன் இல்லை
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் யாரும் இல்லாதது ஏன் என்பது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு பதிலளித்திருந்தது. அதாவது பொதுவாக ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை தொடங்கும் நிலையில், அப்போது தான் அங்குப் பாதுகாப்புப் படை களமிறக்கப்படும். அதாவது ஜூன் மாதமே இந்த ரூட் அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்வோருக்காகத் திறக்கப்படும்.
ஆனால், புனித யாத்திரை தொடங்கும் முன்பே உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலாப் பயணிகளை இங்கு அழைத்து வரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் 20 முதல் சுற்றுலாப் பயணிகள் இங்குச் சென்றுள்ளனர். இருப்பினும், அது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்தவில்லை என மத்திய அரசு பிரதிநிதி தெரிவித்தார். அதாவது சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படாததால் அங்குப் பாதுகாப்புப் படை வீரர்கள் களமிறக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.
இந்தியா நடவடிக்கை
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோல பாகிஸ்தான் நாட்டிற்கு முதுகு எலும்பாக இருக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்தியா மேலும் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் எனத் தெரிகிறது.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications