அறிவிக்கப்படாத போரை தொடங்கியது பாகிஸ்தான்! ஜம்முவில் ட்ரோன்களை வீழ்த்தும் இந்திய ராணுவம்! பதற்றம்
ஸ்ரீநகர்: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான் இந்தியா மீது இப்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஜம்மு பகுதியைக் குறிவைத்து இரவில் திடீரென அறிவிக்கப்படாத போரைப் போன்ற தாக்குதலை ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான். நமது வான்வெளி தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தி வருகிறது. ஜம்மு பகுதியில் நள்ளிரவில் சைரன்கள் அலறப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாகவே பதற்றம் அதிகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதல் மூலம் இந்தப் போர்ப் பதற்றத்தை ஆரம்பித்து வைத்தே பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான். இதற்குப் பதிலடியாக இந்தியா நேற்று ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.

இந்தியப் பாதுகாப்புப் படையின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்போது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. எல்லையில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்களை நம் நாட்டின் வான்வெளி தடுப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நமது எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு சுமார் 8 பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தியுள்ளது.. இதனால் நள்ளிரவில் ஜம்முவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்த சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் வசிக்கும் இடத்தைப் பாதுகாக்கவும் முக்கிய இடங்களைப் பாதுகாக்கவும் ஜம்முவில் பிளாக் அவுட் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முழுமையாக மின்சாரச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு மக்கள் பதற்றத்தில் இருக்கிறார். பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்கிறார்கள். இதனால் ஜம்மு காஷ்மீர் முழுக்க ஒருவிதப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் ஜம்முவில் மக்கள் வசிக்கும் இடங்களையும் நோக்கி பாகிஸ்தான் ட்ரோன்களை வருகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் அறிவிக்கப்படாத ஒரு போரை ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லாலாம். இந்திய ராணுவம் ஏற்கனவே திட்டவட்டமாகத் தாக்குதல் நடத்தினால் அதற்கேற்பப் பதிலடி கொடுப்போம் எனக் கூறியிருக்கிறது. எனவே, இந்திய ராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குப் பதிலடியை ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications