பாக். நரகம் அல்ல நல்ல நாடு: நடிகை ரம்யாவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்
பெங்களூரு: பாகிஸ்தான் ஒன்றும் நரகம் அல்ல அது நல்ல நாடு என்று நடிகை ரம்யா கூறியுள்ளதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகையும், காங்கிஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நான் பாகிஸ்தானுக்கு டூர் சென்றன். அது நரகம் அல்ல ஒரு நல்ல நாடு. மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போன்று பாகிஸ்தான் ஒன்றும் நரக நாடு இல்லை. அவருடைய கருத்து தவறு. அந்நாட்டு மக்களும் நம்மை போன்று உள்ளனர் என்றார்.

ரம்யாவின் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மைசூர் உள்பட பல்வேறு இடங்களில் ரம்யாவை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பாஜக நிர்வாகியும், பிரபல கன்னட நடிகருமான ஜக்கேஷ் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ரம்யா ஆகியோர் பாகிஸ்தானில் குடியேறட்டும். நம் எதிரி நாட்டை போய் ரம்யா புகழ்வது வேதனையாக உள்ளது என்றார்.
காங்கிரஸின் தேசபக்தி ரம்யாவின் கருத்து மூலம் தெரிகிறது. அவரின் கருத்து பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது போன்று உள்ளது என பாஜக முன்னாள் மாநில தலைவர் பிரகலாத் ஜோஷி எம்.பி. தெரிவித்துள்ளார்.
ரம்யா தனது கருத்திற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications