For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் 78 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை பாக். ஆக்கிரமித்துள்ளது: மத்திய அமைச்சர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜம்மு-காஷ்மீர் எல்லையோரம் உள்ள சுமார் 78 ஆயிரம் சதுர பரப்பளவு கொண்ட இந்திய பகுதியை பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:

1948ம் ஆண்டுக்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் எல்லையோரம் உள்ள சுமார் 78 ஆயிரம் சதுர பரப்பளவு கொண்ட இந்திய பகுதியை அத்துமீறலாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டது.

Pakistan is in illegal occupation of 78,000 sqkms of Indian land

1963ம் ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தான்-சீனாவுக்கிடையிலான எல்லை ஒப்பந்தத்துக்கு பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த காஷ்மீர் பகுதியில்

சுமார் 5,180 சதுர கிலோ மீட்டர் தூரத்தை பாகிஸ்தான், சீனாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது.

இந்தியா-சீன எல்லையைப் பொருத்த மட்டில் நிலையான எல்லைக்கோடு என்று எதுவும் வரையறுக்கப்படாததால் சிறு பேதங்களால் அவ்வப்போது சில சூழல்கள் ஏற்படுகின்றன. பொதுவான எல்லைக்கோடு என்று வரையறுக்கப்பட்டிருந்தால் இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

வங்காள தேசம், மியான்மர், பூடான் போன்ற நாடுகள் அத்துமீறலாக இந்திய எல்லையோர பகுதிகளில் எவ்வித ஆகிரமிப்புகளிலும் ஈடுபடவில்லை.

எனினும், இந்தியா மற்றும் வங்காள தேசத்துக்கிடையிலான எல்லைப்பகுதியின் ஓரமுள்ள சில பகுதிகளில் வசிக்கும் ஒரு நாட்டை சேர்ந்த சிலர், இன்னொரு நாட்டின் நிலப்பரப்பில் சிறுபகுதியை கைப்பற்றி அனுபவித்து வருகின்றனர். இது இரு தரப்பிலும் பொதுவாக நடைமுறையில் உள்ளது.

English summary
Pakistan is in illegal and forcible occupation of about 78,000 sqkms of Indian territory in Jammu and Kashmir since 1948, LokSabha was informed yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X