திருநங்கை வேடத்தில் நின்ற நேஹா.. கையில் பாஸ்போர்ட்டு.. 3 பேர் யாருனு பார்த்தால்? அட ஆண்டவா இவங்களா
போபால்: கர்நாடகாவில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், பெண்களை போலவே 4 ஆண்கள் சேலை அணிந்து பணியில் ஈடுபட்டு, அதற்குரிய பணத்தையும் பெற்று வந்திருக்கிறார்கள்.. அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்திலேயே இப்படியொரு மோசடி நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.. ஆண்கள் பெண்களை போல வேடமிட்டு மோசடி நடத்தியதுபோல, திருநங்கைகள் பெயரிலும் மோசடிகள் அரங்கேறுவது அதிகமாகியிருக்கிறது.. அந்தவகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பாருங்கள். இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
திருநங்கைகள் எத்தனையோ பேர், இன்று உயர் பதவிகள், பொறுப்புகள், சேவை, சுயதொழிலில் சாதித்து கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை ஒருங்கிணைக்கவும், நல்வழிப்படுத்தவும், அரசும், தன்னார்வ அமைப்புகளும் முனைப்பு காட்டி வருகின்றன..

எனினும், சில திருநங்கைகள் சிக்னல்களில் யாசகம் கேட்கிறார்கள்... இரவு நேரங்களில் தனியே வரும் ஆண்களை மறித்து, வழிப்பறிகளிலும் இறங்குகிறார்கள்..
பல துறைகளில் சாதித்து காட்டும் திருநங்கைகள்
இது தொடர்பாக வாகன ஓட்டிகளும், காவல்துறையினர் தடுத்தால் "எங்களை திருநங்கை என உதாசீனம் செய்கிறீர்களா" என்று பிரச்சனையை திசைதிருப்பி விடுவார்களோ என்ற கிலியில் தயக்கம் காட்டுவதாக கூறுகிறார்கள்..
இதற்கு நடுவில், திருநங்கைகள் போலவே வேடமிடும், குற்ற செயல்களில் ஆண்களே ஈடுபடும் போக்கும் ஆங்காங்கே முளைத்திருக்கிறது.. தமிழகத்தில்கூட இந்த பிரச்சனை உண்டு.. எனவே, குழந்தைகளை வைத்து யாசகம் கேட்கும் வடமாநில ஆண், பெண்களையும் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே சமூக சேவகர்கள் கோரிக்கை விடுத்தபடி உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சி
இப்படிப்பட்ட சூழலில், மத்திய பிரதேச மாநிலத்தில் 2 அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ஒரே நேரத்தில் நடந்துள்ளது.. பால்கர் மாவட்டம் வசாய் தாலுகா குரான்வாடி அருகே உள்ளது கோச்சிவாடே என்ற கிராமம்..
இங்கு செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் படித்து வருகிறார்கள்.. நேற்று மாலை பள்ளி முடிந்து 3 சிறுமிகள், ஒரு சிறுவனும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 திருநங்கைகள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி 4 குழந்தைகளையும் கடத்த முயற்சித்துள்ளனர்.. தங்கள் முன்பு கத்தியை காட்டவும், 4 குழந்தைகளுமே அலறி கத்தியிருக்கிறார்கள்.. அந்த சத்தத்தை கேட்டு, அங்கிருந்த கிராம மக்கள் பதறி ஓடிவந்தனர்..
ஆட்டோ டிரைவருடன் 3 திருநங்கைகள்
குழந்தைகளை கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் கொண்டுபோய் ஒப்படைத்தனர். அப்போது 4 பேரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், ஆட்டோ டிரைவருடன் வந்த மற்ற 3 பேருமே ஆண்கள் என்பது தெரியவந்தது..
திருநங்கைகள் போல கெட்டப்பில் வந்து குழந்தைகளை கடத்த முயற்சித்ததும் தெரியவந்தது. இப்போது 4 பேருமே ஜெயிலில் உள்ளனர்.. அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல, போபாலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள புத்வாரா பகுதியில் நேஹா என்ற 30 வயது வயது திருநங்கை வசித்து வருகிறார்.. இவரது நடவடிக்கையிலும், பேச்சிலும் அந்த பகுதி மக்களுக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகம் இருந்து வந்துள்ளது... அதனால், இதுகுறித்து பொதுமக்களே போலீசுக்கு தகவல் தந்தனர்..
யாரிந்த திருநங்கை நேஹா
போலீசாரும் விரைந்து வந்து, நேஹாவை பிடித்து விசாரித்துள்ளனர்.. அப்போதுதான், நேஹா வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் திருநங்கை கிடையாது, சொந்த பெயர் அப்துல் கலாம் என்பதும் தெரியவந்தது.
இவருக்கு 10 வயது இருக்கும்போதே, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துவிட்டாராம்.. மும்பையில் 20 வருடங்களாக வசித்துவிட்டு, சமீபத்தில்தான் மத்திய பிரதேசத்தின் போபாலுக்கு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அதுமட்டுமல்ல, தன்னை திருநங்கை என்று சொல்லியே, ஆதார், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் என அனைத்தையுமே சட்டவிரோதமாக பெற்றிருப்பதும், போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வங்கதேசத்திற்கு சென்று வந்திருப்பதும், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது..
பல கோணங்களில் விசாரணை
இவர் எதற்காக இந்தியாவில் இத்தனை வருடம் தங்கினார்? வங்கதேசத்திலிருந்து இங்கு ஏன் வந்தார்? உளவு பார்த்தாரா? எதற்காக திருநங்கை வேடம் அணிந்தார்? என்கின்ற பல கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தியிருக்கிறார்கள் போலீசார்..
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர், திருநங்கை என்று சொல்லி ஆதார், ரேஷன் கார்டுகள் பெற்றிருப்பதும், திருநங்கை வேடமிட்டு குழந்தைகளை கடத்த முயன்றதும், மத்திய பிரதேச மாநிலத்தில் மிகுந்த பரபரப்பை தற்போது ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.
கர்நாடகாவில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், பெண்களை போலவே 4 ஆண்கள் சேலை அணிந்து பணியில் ஈடுபட்டு, அதற்குரிய பணத்தையும் பெற்று வந்திருக்கிறார்கள்.. அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்திலேயே இப்படியொரு மோசடி நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.. ஆண்கள் பெண்களை போல வேடமிட்டு மோசடி நடத்தியதுபோல, திருநங்கைகள் பெயரிலும் மோசடிகள் அரங்கேறுவது அதிகமாகியிருக்கிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications