நடுவானில் கோளாறு... அவசர தரையிறக்கம்... விமானத்தில் சென்ற 139 பேரின் கதி?
நாக்பூர் : பெங்களூருவில் இருந்து பாட்னா சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமானி சமயோசிதமாக விமானத்தை தரையிறக்கினார்.
விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உள்பட 139 பேரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

கோ பர்ஸ்ட் விமானம் ஜி8 873
கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான G8 873 விமானம், விமானிகள், பணிப்பெண்கள், பயணிகள் என 139 பேருடன் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பாட்னா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.

நடுவானில் என்ஜின் பழுது
விமானம் பெங்களூருவில் இருந்து பாட்னா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது நடுவானில் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. கோளாறு காரணமாக என்ஜினில் தீப்பிடித்தால் என்ன செய்வது என யோசித்த விமானிகள் செய்வதறியாது தவித்தனர். பின்னர் விமானத்தின் கேப்டன் சமயோசிதமாக யோசித்து முடிந்தவரை மேலாண்மை செய்து விமானத்தை வேறு ஒரு இடத்தில் தரையிறக்க முயற்சி செய்தார்.

விமானம் தரையிறக்கம்
பின்னர் நாக்பூர் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாக்பூர் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். பின்னர் கோ பர்ஸ்ட் விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் காலை 11.15 மணியளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து தகவல்கள் முன்னரே வெளியானதால் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்தன.

தீயணைப்பு வீரர்கள் தயார்
இதுகுறித்து நாக்பூர் விமான நிலைய இயக்குனர் அபிட். ரூஹி தெரிவிக்கையில் காலை 11 மணியளவில் கோ பர்ஸ்ட் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதை அவசரமாக தரையிறக்க அனுமதி வேண்டும் என்றும் விமானிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் காலை 11.15 மணியளவில் விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஓடுபாதையில், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைப்போடு அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்திருந்ததோம்.

வேறு விமானம்
மேலும் பாட்னா செல்லவேண்டிய பயணிகளுக்கு மாலை 4.45 மணிக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே கோ பர்ஸ்ட் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை பொறியியல் குழுவினர் சரி செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications