ராஜீவ் கொலை வழக்கு... சில உண்மையை மறைத்தது ஏன்... மனம் திறக்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ராஜீவ் கொலை வழக்கு... சில உண்மையை மறைத்தது ஏன்... ?- வீடியோ

  டெல்லி : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு அவரை கொல்வது குறித்த திட்டமே தெரியாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கின் முன்னாள் அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

  இதையடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை முடிவடைந்த நிலையில் இன்னும் விடுவிக்கப்படாமல் சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலேயே இருந்து வருகின்றனர்.

  பரோலில் வெளியே வந்த பேரறிவாளன்

  பரோலில் வெளியே வந்த பேரறிவாளன்

  இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு 2 மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து பரோல் காலம் முடிவடைந்து பேரறிவாளன் சிறை சென்றுவிட்டார். இந்த நிலையில் தற்போது அந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். அவர்தான் பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

  கொலைக்காக என்பது தெரியாது

  கொலைக்காக என்பது தெரியாது

  அந்த வாக்குமூலத்தில் 9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை ஒற்றைக் கண் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனால் எதற்காக அந்த 2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தேன் என்பதும் அது ராஜீவ் காந்தியை கொல்வதற்தாக என்பதும் தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

  வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை

  வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை

  ஆனால் பேரறிவாளன் சொன்ன, தனக்கு தெரியாது என்ற வார்த்தையை வாக்குமூலத்தின் எந்த பகுதியிலும் விசாரணை அதிகாரியாக இருந்த தியாகராஜன் குறிப்பிடவில்லை. இதனால் பேரறிவாளன் தண்டனைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் புதிய திருப்பமாக சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி தியாகராஜனே உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து அந்த உண்மையை மறைத்தது ஏன் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். அதே நேரத்தில் தன்னை இந்த தண்டனையிலிருந்து விடுவிக்கும்படி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  எதற்காக மறைத்தார்

  எதற்காக மறைத்தார்

  அந்த பிரமாண பத்திரத்தில் அவர் கூறுகையில், பேட்டரிகள் எதற்காக வாங்கப்பட்டது என்ற விவரமே பேரறிவாளனுக்கு தெரியாது என்ற அவரது வாக்குமூலத்தை நான் பதிவிடவில்லை. அதைச் செய்ய தவறிவிட்டேன். அப்படிச் செய்தால் ஒப்புதல் வாக்குமூலம் என்பதற்கான அர்த்தம், நோக்கம் போய் விடும் என்பதால் அப்படிச் செய்து விட்டேன். அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ள அவர் பேரறிவாளன் தன்னை விடுவிக்கும்படி கோரியுள்ள மனுவை ஆதரித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Perarivalan was convicted as a plotter in the Rajiv Gandhi assassination case, a former CBI officer involved in the investigation has told the Supreme Court that the convict did not know of the plan to kill the former PM.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற