பெட்ரோல் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்தது! சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெட்ரோல் விலை இதுதான்
Recommended Video

மும்பை: நாடு முழுவதும் தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று, அதிகபட்சமாக, மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 பைசாக்கள் குறைந்து காணப்பட்டது.
சென்னையை பொறுத்தளவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 15 பைசா குறைந்துள்ளது. டெல்லியில் 14 பைசாக்களும், கொல்கத்தாவில் 13 பைசாக்களுமாக விலை குறைந்துள்ளது. அதே நேரம், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.78.89, மும்பையில், ரூ.83.74, டெல்லியில் ரூ.76.02, கொல்கத்தாவில் ரூ.78.70 என்ற விலையில் விற்பனையாகிறது.
கடந்த மே 29ம் தேதி பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது. ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை பெட்ரோல் விலை ரூ.6.46 ஏற்றம் கண்டுள்ளது. டீசல் ரூ.8.21 விலையேற்றம் கண்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் நாட்டில் பண வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பண வீக்கம் சுமார் இரட்டை மடங்காக அதிகரித்து மே மாத நிலவரப்படி, 4.43 சதவீதமாக இருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications