For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னம்மா இப்படி இருக்கேம்மா: பெண் டாக்டரின் காலரைத் தொட்ட பாஜக அமைச்சர்: தீயாக பரவும் போட்டோ

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக அமைச்சர் சவுத்ரி லால் சிங் பெண் டாக்டர் ஒருவரின் காலரை தொட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த சவுத்ரி லால் சிங். அவர் அமர்நாத் யாத்திரை துவங்கியுள்ளதையடுத்து கதுவா மாவட்டத்தில் உள்ள லகான்பூர் நகருக்கு சென்றார். அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் அமர்நாத் யாத்திரைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.

Picture of J&K BJP minister touching woman doctor’s collar goes viral

அப்போது அவர் இளம் பெண் டாக்டர் ஒருவரின் கோட் காலர் சரியாக இல்லை என்று கூறி அதை சரி செய்துள்ளார். அவர் டாக்டரின் காலரை சரி செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

அமைச்சர் பெண் டாக்டர் அருகே சென்று மகளே உன் காலர் சரியாக இல்லை என்று கூறி அதை தனது கையால் சரி செய்தார். அதற்கு அந்த டாக்டர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அமைச்சரின் செயலை பார்த்த பிற டாக்டர்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தங்கள் காலர்களை சரி செய்தனர். அமைச்சர் பெண் டாக்டரை தவறான எண்ணத்தில் தொடவில்லை என்றார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் சிங் ஏப்ரன் அணியாததற்காக பெண் டாக்டர் ஒருவரை திட்டினார். அதற்கு சிங் தனக்கு மன ரீதியாக டார்ச்சர் அளித்ததாக அந்த டாக்டர் புகார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A photograph of Jammu and Kashmir Minister Chaudhary Lal Singh purportedly touching the collar of a woman doctor has gone viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X