கணவரின் சந்தேகம்... ‘அழகான முகத்தை’ தீயில் கருக்கிக் கொண்ட உ.பி. பெண்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் அழகான தோற்றத்தால் கணவரின் சந்தேகத்திற்கு ஆளான மனைவி ஒருவர், தனது முகத்தை தானே தீயில் கருக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேகா லோதி. கடந்த 2011ம் ஆண்டு திருமணமான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. தன் கணவரை விட ரேகா அழகாக இருப்பாராம். இதனால் அவரது கணவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது.

அதனை வெளிக்காட்டும் விதமாக அவ்வப்போது மனைவியை அடித்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவர் துன்புறுத்தி வந்துள்ளார். வீட்டிற்கு வெளியே வேறு யாருடனும் பேசக்கூடாது எனவும் அவர் கட்டுப்பாடு விதித்துள்ளார். மீறி பேசினால் அவர்களுடன் இணைத்து பேசி ரேகாவை சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ரேகா, தனது அழகிய முகத்தினாலேயே இவ்வாறு தான் துன்பத்திற்கு ஆளாவதாக நினைத்துள்ளார். எனவே, தன்னை அவலட்சணமாக்கிக் கொள்ள அவர் முடிவெடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக தனது முகத்தை தானே நெருப்பில் கருக்கினார். இதனால் வலியால் துடித்த ரேகாவை அக்கம்பக்கத்தார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், ரேகாவின் முகமானது 20-25 சதவீதம் எரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறாது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications