For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆத்திகர்களிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியை பிரிக்க சதி... பினராயி விஜயன் கொந்தளிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஆத்திகர்களிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியை பிரிக்க சதி நடப்பதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கும், கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஐயப்பன் கோவிலை திருப்பதி போல நாள்தோறும் திறந்து வைக்கலாம் என முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.

Pinarayi Vijayan alleges attempts to distance party from believers

இதற்கும் தேவஸ்வம் போர்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பினராயி விஜயன் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,

  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கவும், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவவும் கேரள அரசு சம அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
  • ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடத்து சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு செயல்பட்டு வருகிறது.
  • இந்த சூழ்நிலையில் கடவுள் நம்பிக்கையாளர்களிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியைப் பிரிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருகின்றன.
  • மத வழிபாட்டுத் தலங்களை இடிக்க கம்யூனிஸ்ட் அரசு முடிவு செய்துள்ளதாக அவை தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.

English summary
Kerala CM Pinarayi Vijayan said the controversies were attempts to distance the Left party from believers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X