For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகாலாந்தில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு- வழிபாட்டு தலங்கள் தொடர் மூடல்- கோவாவிலும் திறப்பு இல்லை

Google Oneindia Tamil News

கோஹிமா: நாகாலாந்தில் திடீரென கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் அங்கு வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், மால்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இதேபோல் கோவாவிலும் பிரதான தேவாலயங்கள் திறக்கப்படவில்லை.

நாகாலாந்து மாநிலத்தில் மே மாதம் இறுதி வரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. பிற மாநிலங்களில் இருந்து திரும்பியோர் எண்ணிக்கை அதிகரித்ததால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Places of worship, hotels in Nagaland to remain shut

நாகாலாந்தில் ஒரு வார காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்திருக்கிறது. இதனையடுத்து மத்திய அரசு அனுமதித்திருந்தாலும் வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், மால்கள் எதனையும் திறப்பது இல்லை என நாகாலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இதேபோல் கோவாவிலும் கொரோனா அச்சம் காரணமாக மிக முக்கியமான தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டே இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் நாட்டிலேயே கொரோனா பாதிப்பு மிக அதிகம்.

Recommended Video

    கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள்‌ படை - கமல்ஹாசன்

    உலக நாடுகளில் ஒரு நாள் பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா- 24 மணிநேரத்தில் 10,864 பேருக்கு கொரோனா உலக நாடுகளில் ஒரு நாள் பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா- 24 மணிநேரத்தில் 10,864 பேருக்கு கொரோனா

    இதனால் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்களை திறப்பது பற்றி அம்மாநில அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை. கேரளாவில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளன.

    English summary
    Nagaland has decided to keep places of worship and hotels in state closed till further orders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X