சொதப்பிய பிளான் A.. உத்தராகண்ட் சுரங்க மீட்பில் ஷாக்.. கையில் எடுக்கப்பட்ட பிளான் B.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தராகண்டில் தொழிலாளர்களை மீட்கும் பணி இயந்திர கோளாறு காரணமாக தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இன்று இரவுக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புக் குழுவினரால் நம்பிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. கிடைமட்டமாக துளை போடும் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டு மேலிருந்து துளை போட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 Plan A failed, Now Plan B is on in the Uttarakhand tunnel collapse rescue operation

என்ன சுரங்கம்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 12 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். இங்கே சுரங்கம் அமைக்கும் பணியின் போது சுரங்கம் இடிந்து உள்ளே மூடியதால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்துள்ளது.

மீட்பு பணிகள்; உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் கடந்த 13 நாட்களாக சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், பணிகளை முடிக்க இன்னும் குறைந்தது 10 மணிநேரம் ஆகும். மேல் பக்கம் மற்றும் கிடை மட்டமாக இரண்டு துளையிட்டு அது வழியாக ட்யூப் போட்டு.. அதில் இருந்து ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளே ஏற்கனவே சுரங்கம் அமைப்பதற்காக போடப்பட்ட இரும்பு வளையங்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அங்கே மீட்பு பணிகளை செய்வது சிரமம் ஆகி உள்ளது. உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள நாற்பத்தொரு தொழிலாளர்கள், சக்கர ஸ்டிரெச்சர்களில் ஒரு பெரிய குழாய் மூலம் ஒவ்வொருவராக வெளியே இழுக்கப்படுவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இயக்குநர் ஜெனரல் அதுல் கர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் குழாய்களை உள்ளே அனுப்பும் அளவிற்கு இன்னும் அங்கே துளைகள் போடப்படவில்லை. என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் குழாய் வழியாக உள்ளே நுழைந்து, அவர்கள் தொழிலாளர்களை அடைந்ததும், ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே அனுப்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சொதப்பிய பிளான்: இந்த பிளான் தற்போது சொதப்பி உள்ளதாக கூறப்படுகிறது. கிடைமட்டமாக துளை போட போட மேலும் சரிவுகள் ஏற்படுகிறது. மேலும் பாறைகள் விழுகிறது. அதோடு சுரங்கத்தில் துளை போடுவதற்காக எந்திரங்களை வைக்கும் இடமும் சரிந்து விழுகிறது. இதனால் அந்த பகுதியை மொத்தமாக மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாறாக பிளான் ஏ சொதப்பிய காரணத்தால் பிளான் பியை கையில் எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கூடுதல் டிரில்லிங் எந்திரங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. உத்தராகண்டில் தொழிலாளர்களை மீட்கும் பணி இயந்திர கோளாறு காரணமாக தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இன்று இரவுக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புக் குழுவினரால் நம்பிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. கிடைமட்டமாக துளை போடும் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டு மேலிருந்து துளை போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது மலையின் மேலே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து சுரங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+