கடவுளே ப்ளீஸ் ராகுலை பிரதமராக்கு: காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸார் பிரார்த்தனை
டெல்லி: கடவுளே ராகுல் காந்தியை பிரதமராக்கு என்று காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனை செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.
முன்னதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே கட்சியினர் இன்று காலை கூடினர். அவர்கள் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
மேலும் கடவுளே தயவு செய்து ராகுல் காந்தியை பிரதமராக்கு, சோனியா காந்தியின் கட்சியை வெற்றி பெறச் செய் என்று போஸ்டர் அடித்து ஒட்டினர். ஏதாவது அதிசயம் நடந்து காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் இப்படி இருக்க பாஜக அலுவலகத்தில் கட்சியினர் குதூகலமாக இருந்தனர்.












Click it and Unblock the Notifications