புற்றுநோயுடன் போராடும் 4 வயது ஆலியாவுக்கு உதவி செய்யுங்க ப்ளீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: புற்றுநோயால் அவதிப்படும் 4 வயது ஆலியாவுக்கு உதவி செய்யுமாறு அவரின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை ஜோகேஸ்வரி சாவ்ல் பகுதியில் வசித்து வருபவர் ஜாவித் மாலிக்(28). அவரின் மகள் ஆலியா(4). வரும் வருமானத்தை வைத்து ஒரு சின்ன வீட்டில் வசித்து வருகிறார்கள்.

Please help to save Baby Alia

இந்நிலையில் மார்ச் 1ம் தேதி காலை தூங்கி எழுந்த ஆலியாவின் வயிறு வீங்கியிருந்தது. வலியால் துடித்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஜாவித்.

ஆலியாவை பரிசோதனை செய்த மருத்துவர் அவருக்கு புற்றுநோய் அதுவும் முற்றிய நிலையில் உள்ளதாக கூறியதை கேட்டு ஜாவிதின் தலையில் இடி விழுந்தது போன்று இருந்தது.

Please help to save Baby Alia

சிகிச்சைக்கு ரூ. 4 லட்சம் தேவை என்று மருத்துவர் சொல்ல அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது என்று தெரியாமல் விழித்த ஜாவித் Ketto.org மூலம் மக்களிடம் நிதியுதவி கேட்டு நிற்கிறார்.

Please help to save Baby Alia

ஆலியா பற்றி ஜாவித் கூறுகையில்,

நடிகை ஆலியா பட் போன்று என் மகள் பெரிய ஆளாக வர வேண்டும் என நினைத்து ஆலியா என்று பெயர் வைத்தேன். ஆனால் என் மகளுக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நினைத்து பார்க்கவில்லை. என் மகள் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதிசயம் நடக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

நீங்கள் செய்யும் சிறு உதவியும் சிறுமி ஆலியாவின் உயிர் காக்க உதவும்.

English summary
A 28-year-old father has started a fundraiser on Ketto.org so that he can pay for his 4-year-old daughter's cancer treatment and give her a normal childhood outside of hospitals.
Please Wait while comments are loading...